தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bayilvan Ranganthan Says About Surya Cried In Vijayakanth Graveyard

Bayilvan: சூர்யாவின் அழுகை வெறும் நாடகம் - குற்றச்சாட்டு வைத்த பயில்வான்

Aarthi V HT Tamil
Jan 08, 2024 07:15 AM IST

சூர்யாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவருக்கு எதிராக முன்வந்துள்ளார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத சூர்யா
விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத சூர்யா

ட்ரெண்டிங் செய்திகள்

சூர்யாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவருக்கு எதிராக முன்வந்துள்ளார். சூர்யா காட்டியது வெறும் நாடகம் என்பது குற்றச்சாட்டு. 

இது தொடர்பாக Madras Movieஎன்ற யூட்யூப சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜயகாந்த் இறப்பு அன்று வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் நடிகர் சூர்யா அவரை சந்திக்க வரவில்லை. ஆனால் அவர் சமாதியில் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமார், கார்த்தி ஆகியோரும் உடன் இருந்தனர். முதலில் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பிரேமலதா மற்றும் குழந்தைகளை பார்த்த சூர்யா, விஜயகாந்தின் கல்லறைக்கு வந்து இறுதி மரியாதை செலுத்தினார். 

சூர்யா இப்படி அழுது கொண்டே விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்ததால், விஜயகாந்த் எழுந்து காப்பாற்றுவாரா? இது எல்லாம் நாடகம். விஜயகாந்த் இறந்த போது சூர்யா அங்கு இல்லை. ஆனால் அப்போது ஏன் தந்தை சிவக்குமார் உள்ளிட்டோர் வரவில்லை.

மேலும், முந்தைய சம்பவத்தில் விஜயகாந்த் மீது சிவகுமார் கோபமாக இருந்தார். சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் திருமணம் ஆனபோது சூர்யாவின் அப்பா விஜயகாந்தை அழைத்திருந்தார். ஆனால் விஜயகாந்த் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தும் விஜயகாந்த் திருமணத்தில் கலந்து கொள்ளாததால் சிவகுமார் கோபமடைந்தார்.

ஆனால், ஜெயலலிதாவும் கருணாநிதியும் வரும் மேடைக்கு வந்தால் பிரச்னை ஏற்படும் என நினைத்து கேப்டன் ஒதுங்கியே இருந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதிகளை விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று விலை உயர்ந்த பரிசு வழங்கினார். ஆனால் கடைசி வரை சிவகுமார் தனது குழந்தைகளின் திருமணத்திற்கு வராததால் தகராறு செய்து வந்தார். அதனால்தான் விஜயகாந்தின் இறுதிச் சடங்குகளுக்கு வரவில்லை.

தாமதமாக வந்தாலும் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றதற்கு காரணம் இருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தமிழில் நட்சத்திரம் பற்றி பெரிய விவாதம் நடந்தது. இதனால், தானும், தன் குழந்தைகளும் இறுதி அஞ்சலி செலுத்த செல்லாவிட்டால், அது அவர்களை எதிர்மறையாக பாதிக்கும் என நினைத்து, சிவக்குமார் குடும்பத்துடன் வந்தார். எனவே, இந்த அழுகைக்கு நேர்மை இல்லை" என்றார்.

நன்றி: Madras Movie

IPL_Entry_Point

டாபிக்ஸ்