Director Pandiraj: முதல் படத்திலேயே தேசிய விருது! தரமான கதைகள யுனிவெர்ஸ் - ரசிகர்களின் பேவரிட் இயக்குநர் பாண்டிராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Pandiraj: முதல் படத்திலேயே தேசிய விருது! தரமான கதைகள யுனிவெர்ஸ் - ரசிகர்களின் பேவரிட் இயக்குநர் பாண்டிராஜ்

Director Pandiraj: முதல் படத்திலேயே தேசிய விருது! தரமான கதைகள யுனிவெர்ஸ் - ரசிகர்களின் பேவரிட் இயக்குநர் பாண்டிராஜ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 07, 2024 12:00 PM IST

முதல் படத்திலேயே தேசிய விருதுகள், தரமான கதைக்களம், திரைக்கதை யுனிவெர்ஸ் மூலம் ரசிகர்களின் பேவரிட் ஆக இருந்து வரும் இயக்குநர் பாண்டிராஜ்க்கு இன்று பிறந்தநாள். எவ்வித சினிமா பின்னணியும் இல்லாத இவர் இயக்குநர் ஆவதற்கு முன் ஆபிஸ் பாய், செக்யூரிட்டி வேலைகளில் பணிபுரிந்துள்ளார்.

முதல் படத்திலேயே தேசிய விருது, ரசிகர்களின் பேவரிட் இயக்குநர் பாண்டிராஜ்
முதல் படத்திலேயே தேசிய விருது, ரசிகர்களின் பேவரிட் இயக்குநர் பாண்டிராஜ்

சிறுகதை எழுத்தாளர்

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்த பாண்டிராஜ், சினிமா இயக்குநராகும் ஆசையில் சென்னை வந்தவுடன் ஆரம்பத்தில் இயக்குநர் கே. பாக்யராஜின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலை செய்துள்ளார். அதற்கு முன்னர் ஏவிஎம் புரொடக்‌ஷனில் செக்யூரிட்டயாகவும் இவர் வேலை செய்துள்ளாராம்.

பாக்ராஜிடம் பணியாற்றியபோது அவரது பாக்யா இதழில் பல்வேறு சிறுகதைகளை எழுதியுள்ளார். மெல்ல மெல்ல தனது சினிமா தொடர்பை அதிகப்படுத்திய பாண்டிராஜ், இயக்குநர் சேரனின் உதவியாளார் ஆனார். அதன் பிறகு இயக்குநர் தங்கர் பச்சான், சிம்பு தேவன் ஆகியோருக்கும் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

முதல் படம்

2009இல் சசிக்குமார் தயாரிப்பில் வெளியான பசங்க படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதுதான் நடிகர் விமலின் முதல் படமாகும். தனது குழந்தை பருவ அனுபவங்களை வைத்து பாண்டிராஜ் இயக்கியருந்த பசங்க படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கொண்டாடப்பட்ட இந்த படம் சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளை வென்றது. அதேபோல் தமிழ்நாடு அரசின் சிறந்த படம், சிறந்த வசனத்துக்கான விருதை வென்றது.

தமிழில் வெளியான சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படங்களில் பசங்க படத்துக்கு தனியொரு இடமுண்டு. காதல், குடும்ப பாசம், மனிதர்களுக்கு இடையிலானஈகோ என பல விஷயங்களுடன் சிறந்த பொழுதுபோக்கு படமாக இது அமைந்திருந்தது.

திருப்புமுனை தந்த இயக்குநர்

தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எட்டுத்திக்கும் துணிந்தவன் போன்ற ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

வம்சம் படத்தில் அருள்நிதியை ஹீரோவாக அறிமுகமாக்கினார். அதேபோல் இவரது மெரினா படம் சிவகார்த்திகேயனின் அறிமுக படமாகும்.

இவரது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் விமல், சிவகார்த்திகேயன் என இருவரையும் வைத்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உருவாக்கியிருந்தார். படம் வெற்றி பெற்றதுடன் இருவருக்குமே திருப்புமுனையைாக அமைந்தது.

கிராமத்து பின்னணி பேமிலி சென்டிமென்ட், காமெடி, ஆக்‌ஷன் கலந்த பாணியில் தனது படங்களை உருவாக்குவதை ஸ்டைலாக கொண்ட இயக்குநராக பாண்டிராஜ் உள்ளார்.

இது தவிர சூப்பர் ஹிட் படமாக அமைந்த கோலி சோட படத்துக்கு பாண்டிராஜ் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.

பாண்டிராஜ் சாதனை

அறிமுக படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளையும், தமிழ்நாடு அரசின் இரண்டு வென்றார் இயக்குநர் பாண்டிராஜ். தமிழ் சினிமாவில் வேறெந்த அறிமுக இயக்குநரும் செய்யாத விஷயமாகவே இது உள்ளது. இதுவரை 2 தேசிய விருதுகள், 5 தமிழ்நாடு அரசின் விருதுகள் வென்ற இயக்குநராக உள்ளார்.

கிராமத்து வாழ்கை, குடும்ப சென்டிமென்ட், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்து கலவைகளையும் தரமான கதைக்களம், திரைக்கதையால் தனது யுனிவெர்சில் கொடுத்து ரசிகர்களின் பேவரிட் இயக்குநராக இருந்து வரும் பாண்டிராஜ்க்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.