"சாபம் விட நீ என்ன கண்ணகியா? பத்தினியா? 4 பேர லவ் பண்ணிட்டு 5வது ஆள கல்யாணம் பண்ணிருக்க" வம்பிழுக்கும் பயில்வான்
சினிமாவில் 4 பேரை காதலித்து 5வது ஆளை கல்யாணம் பண்ணுன நயன்தாரா என்ன கண்ணகியா? அவர் சாபம் விட்டால் அது பழிப்பதற்கு என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் விமர்சித்துள்ளார்.
நடிகை நயன்தாரா நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் காட்சிகள் அவரது நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் எனும் ஆவணப் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து, நடிகர் தனுஷ், இப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவனிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், 10 கோடி நஷ்டஈடு கேட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷுக்கு 3 பக்க கடிதம் எழுதிய நயன்தாரா
இதையடுத்து, நடிகை நயன்தாரா, தனுஷ் சினிமாவிற்கு எப்படி வந்தார், அவரது குணம் என்ன, அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என 3 பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அறிக்கையாக வெளியிட்டார். இது, இந்திய அளவில் பேசுபொருளான நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான், நயன்தாரா குறித்து மெட்ரோ மெயில் யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
தனுஷ்கிட்ட கேட்டா ஒத்துக்க போறாரு
அதில், தனுஷ்கிட்ட போய், எங்களால இவ்வளவு தான் தரமுடியும் அப்டின்னு கேட்டா அவரு ஒத்துகிட்டு இருந்திருப்பாரு. நீ பாட்டுக்கும் என்கிட்ட 10 கோடி ரூபா கேட்டாரு. இதெல்லாம் பழிக்கு பழி வாங்கக் கூடிய விஷயம்ன்னு சொன்னா எப்படி நியாயம். பழிக்குப் பழி வாங்குற விஷயமா இது?
மோகன்லாலோட கிசுகிசு
மலையாள சினிமாவுல மோகன்லாலோட கிசிகிசுக்கப்பட்டதுக்கு அப்புறம் தான சினிமாவுல நடிக்கவே வந்த? நீ ஏன் கிருத்துவ மதத்த விட்டு இந்துவா மாறுன? நாங்க யாராவது கேட்டோமா? மரியன் குரியன் தான உன் பேரு ஏன் நயன்தாரான்னு மாத்துன?
நீ என்ன கண்ணகியா? பத்தினியா?
வல்லவன் படத்துல சிம்பு உன் உதட்ட கடிச்சு இழுப்பாறே.. அவ்வளவு மோசமா நீ நடிச்ச. சாபம் விடுற அளவுக்கு நீ சாபம் விடுற அளவுக்கு கண்ணகியும் கிடையாது பத்தினியும் கிடையாது. 4 பேர காதலிச்சிட்டு, 5 பேர கல்யாணம் பண்ணிருக்க. இதுல என்ன சாபம்?
பழிக்குப் பழிங்குறது எல்லாம் அநியாயமான வார்த்தை. அபத்தமான வார்த்தை. கொடூரமான வார்த்தை. உனக்கும் தனுஷிற்கும் பழிவாங்க என்ன இருக்கு?
கல்யாணத்தையே காசாக மாற்றிய நயன்தாரா
நயன்தாரா தன்னோட திருமணத்தக் கூட டிவிகளில் ஒளிபரப்பக் கூடாதுன்னு தடை விதிச்சாங்க. நெட்பிளிக்ஸ்ல திருமண வைபவத்த பதிவா போடணும்னு பணம் வாங்கிருக்காங்க.
நானும் ரவுடி தான் படம் தனுஷின் சொந்த படம். நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு காதல் உருவானதே இந்தப் படத்துல தான்னு நயன்தாராவே சொல்லிருக்காங்க. ஒரு மரியாதைக்காவது. இந்தப் படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பயன்படுத்திருக்கோம்னு சொல்லனுமா இல்லையா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
எக்கச்சக்க சொத்து
தனுஷாவது பரவாயில்லை நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்ன்னு சினிமாவையே சுத்தி வரார். ஆனா, நயன்தாராவுக்கு எவ்வளவு சொத்து இருக்கு. அம்பானி குடும்பத்தோட சேர்ந்து தொழில். மேக்கப் ஐட்டம், டீக்கடை, சாப்பாடு கம்பெனி, கல்யாண வீடியோ வித்த காசு என எவ்ளோ வருமானம் வருது. அதுல வர காசுல கொடுத்த என்ன? அதவிட்டுட்டு சண்டித்தனம் பண்ணிட்டு இருக்க. யாரோடையும் ஒத்துப் போறதே கிடையாது. மரியாதையும் கிடையாது என பயில்வான் நயன்தாராவின் செய்கைகள் குறித்து மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்