தனுஷ் ஒரு சைக்கோ.. அம்மா நடிகைங்களக்கூட விட்டுவைக்க மாட்டான்- மீண்டும் களமிறங்கிய சுசித்ரா
நடிகர் தனுஷ் ஒரு சைக்கோ. அவரோடு படத்தில் அம்மாவாக நடிக்கும் நடிகைகளைக் கூட டார்ச்சர் செய்வார் என பாடகி சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நல்ல விஷயங்களும் மக்களுக்கு வெளிப்படுத்தும் வண்ணம் நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் எனும் ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார். இதில், நயன்தாரா திருமண வாழ்க்கை பந்தத்திற்கு அடித்தளமிட்ட நானும் ரவுடி தான் படத்திலிருந்து எந்தவொரு காட்சிகளையும் இசையையும் பயன்படுத்த முடியாமல் போனது.
நயன்தாரா மேல் தனுஷுக்கு வெறுப்பு
இந்தப் படத்தை தயாரித்த நடிகர் தனுஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது கொண்டிருந்த தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக, காப்பி ரைட்ஸ் உரிமைகளை தர மறுத்தது தான். அதுமட்டுமின்றி, படப்பிடிப்பு சமயத்தில் எடுத்த புகைப்படங்களையும் பயன்படுத்த விடாமல் அவர் 10 கோடி நஷ்டஈடு கேட்பதாகக் குற்றம் சாட்டிய நயன்தாரா, தனுஷின் செயல்கள் அனைத்தும் மலிவாக உள்ளது. இனியாவது அவர், மற்றவர்களிடம் அன்பை பரப்பட்டும் என கொந்தளித்து அறிக்கை வெளியிட்டார்.
கருத்து சொல்ல துடித்த சுசித்ரா
இந்த அறிக்கையை பலரும் பாடகி சுசித்ராவிற்கு அனுப்பி உள்ளனர். குழந்தைகள் இதழில் வேலை கிடைத்த நிலையில், இனி யாரைப் பற்றியும் கருத்து கூற மாட்டேன் எனவும், யூடியூபிற்கு எவ்வித பேட்டியும் தரமாட்டேன் எனவும் சுசித்ரா கூறிவந்த நிலையில், தற்போது இந்த விஷயத்தை பார்த்த உடனேயே கருத்து சொல்ல துடித்திருக்கிறார்,