தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Baakiyalakshmi: இனியா பாஸ்.. பாக்யா ஃபெயில்.. தீஞ்சு போன பாயாசம் ஒரு காரணமா?

Baakiyalakshmi: இனியா பாஸ்.. பாக்யா ஃபெயில்.. தீஞ்சு போன பாயாசம் ஒரு காரணமா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 20, 2023 11:42 AM IST

இதெல்லாம் எது மாதிரியான சென்டிமெண்ட் என தெரியவில்லை. ஆனால், பாயாசம் படு மோசம்

பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் (Disney Hotstar)

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி ஒரு மோசமான சூழல், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு நேர்ந்துள்ளது. 5 ஆயிரம் பேருக்கு மூன்று நாட்கள் சமையல் செய்து, 18 லட்சம் ரூபாய் கடனை அடைத்த பாக்கிய லட்சுமிக்கு, ஆயிரத்திற்குள் குறைவான நபர்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் ஒரு ஆர்டர் கிடைக்கிறது. 

அன்றைய தினம் அவரது மகள் இனியாவுக்கு ப்ளஸ் 2 ரிசல்ட். ஆர்டரில் கவனம் செலுத்தாமல் மகளின் தேர்வு முடிவுகளில் திணறுகிறார் பாக்யா. மகள் இனியா 600க்கு 596 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றும், அதை தாய் பாக்கியாவிடம் பகிர முடியாத அளவிற்கு, தொலைதொடர்பே இல்லாத ஊரில் பாக்யா இருக்கிறாராம். 

எந்த அழைப்பும் அந்த ஊருக்கு போகாதாம். இதனால் பாக்யாவிற்கு மகளின் முடிவு என்ன என்பது தெரியாமல் ஒரே கவலையாம். இந்த கவலையில் சமையலில் கவனம் செலுத்தாமல் போய்விடுகிறதாம். இதன் விளைவு பாயாசம் தீய்ந்து போய்விடுகிறது. 

விருந்துக்கு வந்த மாப்பிள்ளை வீட்டார், பாயாசம் தீய்ந்து போனதால் கோபமாகி, திருமணத்தையே நிறுத்த பார்க்கிறார்கள். கோபத்தில் பெண் வீட்டார் மீது கொந்தளிக்கிறார்கள். பதிலுக்கு பெண் வீட்டால் பாக்யா மீது பாய்கிறார்கள். 

ஒரு பாயாசத்துக்கு இவ்வளவு அக்கப்போரா? சரி, பாயாசம் சரியில்லை என்பது மாப்பிள்ளை வீட்டாரை அவமானப்படுத்தும் நிகழ்வாம். அதற்கு பக்கம் பக்கமாய் ஆக்ரோஷ டயலாக் வேறு. இதையெல்லாம் விட பெரிய கொடுமை, பாக்யா உள்ளிட்ட அனைத்து சமையல் கலைஞர்ககளையும் ஒரு அறையில் அடைத்து வைத்து, பாயாசத்தை தீய வைத்ததற்காக, போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துவிட்டது பெண் வீட்டார். 

இதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது மட்டுமல்ல, அதுக்கும் மேலே என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம் பாக்யாவின் மகள் இனியா பாஸ். மற்றொரு பக்கம் சமையலில் பாக்யா ஃபெயில். மகிழ்ச்சியில் இனியா பாயாசம் சாப்பிடுகிறார் என்றால், அதே பாயாசத்தால் பாக்யா கம்பி எண்ணுவார் போல. 

இதெல்லாம் எது மாதிரியான சென்டிமெண்ட் என தெரியவில்லை. ஆனால், பாயாசம் படு மோசம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்