Babloo Prithviraj: ‘அந்த பொம்பள சோக்காலதான்.. எனக்கு இது தேவையான்னு’ - ஓப்பனாக பேசிய பப்லு பிரித்விராஜ் !
Babloo Prithviraj: அப்போது தான் எனக்கு ஷீத்தல் அறிமுகமானாள். அப்போது அவளுக்கு வயது 24. எனக்கு 55 இருவரும் நண்பர்களாக பழகினோம், காதலித்தோம். அந்தப் பெண் மிகவும் அதிக புரிதலோடு இருந்ததால், என்னை மிகவும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டாள். - பப்லு பிரித்விராஜ் !
நடிகர் பப்லு பிரித்விராஜ் அண்மையில் நாதஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
என்னுடைய மனைவிதான்
இது குறித்து அவர் பேசும் போது, “வாழ்க்கையில் சாதித்து விட்டால் எனக்கு பின்னால், என்னுடைய மேனஜர்தான் இருந்தார். என்னுடைய மனைவிதான் இருந்தார். என்னுடைய கடின உழைப்பு தான் இருந்தது என்றெல்லாம் பேசுகிறோம். அதை நான் ஏற்றுக் கொள்ளும் பொழுது, என்னுடைய தோல்விக்கு பின்னரும் நான்தான் இருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
நான் எல்லாவற்றையும் மிகச் சரியாக செய்தேன். தினசரி காலையில் ஜிம்முக்கு சென்றேன். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மிகச் சரியான நேரத்திற்கு சென்றேன். ஒவ்வொரு காட்சியையும் அக்கறையோடும், ஆர்வத்தோடும் செய்ய வேண்டும் என்று சிரத்தையோடு செய்தேன். ஆனாலும் வெற்றி என்பது வரவே இல்லை. அதுதான் எனக்கு கூடுதல் மன அழுத்தத்தை கொடுத்து விட்டது.நான் உங்களுக்கு ஒரு சம்பவத்தை இங்கு சொல்கிறேன். சிலர் சொல்வார்கள். நான் அந்த படத்திற்காக உயிரை கொடுத்து நடித்தேன் என்று..ஆனால் உண்மையிலேயே எனக்கு அது நடந்தது.
ஆபத்தில் மாட்டிக்கொண்டேன்.
ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஆற்றில் விழும் பூவை எடுத்து ஹீரோயினுக்கு கொடுக்க வேண்டும்.நான் நீச்சல் அடித்து அந்த பூவை அந்த ஹீரோயினிடம் கொடுக்க வேண்டும். அந்த பூ ஆசிட்டில் விழும் இதுதான் காட்சி. பூ ஆற்றில் விழுந்தது ஆற்றில் ஒரு இடத்தில் கயிறு கட்டி இருந்தார்கள். நான் நீச்சல் அடித்து பூவை பிடித்து விட்டேன். தொடர்ந்து கயிறை பிடிக்க முயன்றேன்.
ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது. நேராக சென்று சுழலில் மாட்டிக் கொண்டேன். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் சுழலில் சிக்கி இருந்தேன். ஒரு கட்டத்தில் சுழல் விரிந்த நிலையில், மயிரிழையில் உயிர் தப்பினேன். இப்படி எல்லாவற்றையும் சரியாக செய்தேன். பின்னரும் ஏன் எனக்கு சரியான படங்கள் அமையவில்லை என்று யோசித்தேன். அதற்கு என்னுடைய மேனேஜரை நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை.
தொடர் தோல்வியால் கடுமையான மன அழுத்தத்திற்குள் சென்று விட்டேன். என்னதான் நான் மனதுக்குள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி என்னை வைத்துக் கொண்டிருந்தாலும், உள்ளே என்னுடைய மோட்டிவேஷன் படிப்படியாக, சரிந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் வயதாகி விட்டது இனி ஒன்றும் சாதிக்க முடியாது. அப்பா, அண்ணன் கேரக்டர்கள் கிடைத்தால் நடித்து கொஞ்சம் பணம் சம்பாதித்து விட்டு சென்றுவிடலாம் என்று தான் நினைத்து நினைத்துக் கொண்டிருந்தேன்.
பொம்பள சோக்கு தேவையா?
அப்போது தான் எனக்கு ஷீத்தல் அறிமுகமானாள். அப்போது அவளுக்கு வயது 24. எனக்கு 55 இருவரும் நண்பர்களாக பழகினோம், காதலித்தோம். அந்தப் பெண் மிகவும் அதிக புரிதலோடு இருந்ததால், என்னை மிகவும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டாள். ஆனால், அதற்கு நான் வாங்கிய ஏச்சு பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.55 வயதில் 24 வயது பெண்ணா என்ற ரீதியில் என்னை அப்படி போட்டு வறுத்து எடுத்தார்கள. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்த வயதில் உங்களுக்கு அது வேண்டுமா என்றெல்லாம் என்னை பேசினார்கள். ஒரு கட்டத்தில் நமக்கு எல்லாம் தேவையா என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது.
இந்தக் கட்டத்தில் தான் நான் அனிமல் திரைப்படத்தில் கமிட்டானேன். அந்த திரைப்படம் மிக நன்றாக சென்றது கோடிக்கணக்கில் வசூல் ஆனது இதற்கிடையே விஜய் சேதுபதி ace படத்தில் நடித்திருந்தேன். ஆனால், அனிமல் படத்தின் வெற்றி அந்த கேரக்டரை மிகவும் பெரிதாக அந்த இயக்குநரை எழுத வைத்துவிட்டது. அதுபோல தெலுங்கு படம் ஒன்றில் நடித்த அந்த படம் நன்றாக சென்று கொண்டிருந்தது நேரம் ஆடும் பொழுது தற்போது எல்லாமே நல்லபடியாக நடக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்