2வது திருமண நாளில் 3வது திருமணம் செய்து கொண்ட அன்னபூரணி அரசு அம்மா.. திருமதி ரோகித் ஆனார் அம்மா!
‘நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன்’
அன்னபூரணி அரசு அம்மா.. இந்த பேரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜிதமிழ் ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ், அன்னபூரணி என்றால் இன்னும் பேமஸ். முதல் திருமணத்தை உதறிவிட்டு, ஆன்மிக கூட்டணியாக அரசு என்பவரை மணந்து, அதன் பின் ஆன்மிகப் பணிகளில் மும்முரமானார் அன்னபூரணி. எதிர்பாராத விதமாக, அரசு இறந்து போக, அவர் விட்டுச் சென்ற ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் காட்டினார் அன்னபூரணி. அதை விஸ்திரம் செய்ய ஆசைப்பட்டு, செங்கல்பட்டில் பெரிய ஆசிரமம் தொடங்க முயற்சித்தவருக்கு, அங்கு எதிர்ப்புகள் வர, கூடவே, தன்னுடைய பழைய கால வாழ்க்கையும் விமர்சனமானது.
அதன் பின், பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளான அன்னபூரணி, ‘உங்க சங்காத்தமே வேண்டாம்..’ என சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை கடந்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு தன்னுடைய ஆசிரமத்தை.. இல்லை இல்லை.. ஆலயத்தை நிறுவிய அவர், தன் பிள்ளைகளுக்கு(பக்தர்களை) ஆசி வழங்கி வருகிறார். இந்நிலையில் தான், நேற்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அன்னபூரணி. அதில், ரோகித் என்பவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும், அதுவும் தனது இரண்டாவது திருமணம் நடந்த அக்டோபர் 28 ம் தேதியான நேற்றைய நாளில் அது நடந்ததாகவும் தெரிவித்தார்.
ரோகித் வேறு யாருமில்லை, அன்னபூரணி உடன் இருந்து அவரையும், அவரது ஆலயத்தையும் நிர்வகித்து வந்தவர். அன்னபூரணி அரசு அம்மா பிரச்னைகளில் சிக்கிய போதெல்லாம், அதிகம் அடிபட்ட பெயர் தான் ரோகித். அவரை மணந்து, அனைத்தும் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் அன்னபூரணி, அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதோ அன்னபூரணி தன் பிள்ளைகளுக்கு(பக்தர்களை) அறிவித்த அறிவிப்பு..
அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பம்
‘என்னுடைய பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பு.. நவம்பர் 28, 2024 அன்று அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம். அதாவது அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பம். அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூர்களால், என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்யவும் என்னுடைய நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெருப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் , நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன்.
உடல் இந்த பூமியில் இருக்கும் வரை
அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும். என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை.
மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாகதான் செய்வேன். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன்,’’ என்று அந்த அறிவிப்பில் அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார்.
அனைவரும் இந்த புதுமணத் தம்பதியை வாழ்த்தலாமே ப்ரெண்ட்ஸ்!
டாபிக்ஸ்