Annapoorani: பார்த்தா பசி தீருமா? உணர்வுகளுக்கு விருந்தளிக்க வரும் நயன்தாராவின், அன்னபூரணி
Annapoorani: அன்னபூரணி படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மட்டுமின்றி உங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
பல்வேறு வகைகளில் உயர்தர பொழுதுபோக்கை வழங்குவதில் ஜீ தமிழ் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக மக்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
சிறந்த பொழுதுபோக்கு
மேலும் வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பிளாக் பஸ்டர் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருவதன் மூலமாக தனது பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை உறுதி செய்து வருகிறது.
அன்னபூரணி
அந்த வகையில் இந்த ஜூலை மாதம், புகழ்பெற்ற லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படத்தின் உலக தொலைக்காட்சியின் முதல் பிரீமியர் காட்சியை ஒளிபரப்புவதில் ஜீ தமிழ் மகிழ்ச்சி அடைகிறது. வரும் ஜூலை 28 ஆம் தேதி மதியம் 1: 30 மணி முதல் 4: s30 மணி வரை இந்த அன்னபூரணி திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திறமையான நிலேஷ் கிருஷ்ணா இயக்கி, நடிகை நயன்தாரா லீட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இந்த திரைப்படத்தில் ஜெய், பூர்ணிமா, கார்த்திக் குமார், சத்யராஜ், லாஸ்லியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட்
இந்த படத்தின் கதையானது அன்னபூரணி என்ற இளம் பெண்ணைச் சுற்றி சுழல்கிறது, அன்னபூரணி என்ற பெண் சமையலை நேசிப்பதோடு, வீட்டாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைத் தவிர்க்கும் முயற்சியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைத் தொடர முயற்சிக்கிறாள்.
அன்னபூரணியின் இந்த பயணம் சதிவேலை, இழப்பு என பல சவால்களை கொண்டதாக உள்ளது. இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் தலைசிறந்த சமையல்காரராகவதை தனது இறுதி இலக்காக வைத்து தொடர்ந்து பயணித்து செல்கிறாள். அன்னபூரணி தடைகளை வென்று தன் கனவை அடைவாளா? இல்லையா? என்பதை அறிய இந்த ஜூலை 28 ஆம் தேதி ஜீ தமிழில் காண தயாராகுங்கள்.
இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக மட்டுமின்றி உங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய படம் 'அன்னபூரணி'.உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்து படத்தை பார்த்து ரசிக்க மறவாதீர்கள்.
மேலும் உணவை மையக்கதையாக கொண்ட 'அன்னபூரணி' ஒளிபரப்பின் போது 'பார்த்தால் பசி தீரும்' என்ற புது முயற்சியை ஜீ தமிழ் கையில் எடுத்துள்ளது. அதாவது இந்த படமானது ஒளிபரப்பும் நேரத்தில் டிவி ஸ்க்ரீனில் தோன்றும் மொபைல் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து பார்வையாளர்கள் எங்களது முயற்சியில் ஒன்றிணையலாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு 10 தனிப்பட்ட அழைப்புகளுக்கும், உணவின்றி தவிக்கும் ஒரு குழந்தைக்கு ஜீ தமிழ் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் உணவை வழங்கி அவர்களின் பசி தீர்க்க உள்ளது.
ஜீ தமிழுடன் இணைந்து பாசிட்டிவான எண்ணங்களை பரப்பவும், ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தவும், ஜூலை 28 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'அன்னபூரணி' திரைப்படத்தை உங்கள் ஜீ தமிழில் கண்டு மகிழுங்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்