அழகனை போட்டுக் கொடுக்க கிளம்பிய கும்பல்.. கடைசி நிமிடம் வரை பரபரப்பாகும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
அழகனை நினைத்து அழும் ஆனந்தியிடம் உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என முத்துவும், ஆட்டோக்காரரும் முயற்சி செய்கின்றனர்.
ஆனந்தியிடம் அழகன் என்ற பெயரில் கடிதம் எழுதி காதலித்தது தான் தான் என்ற உண்மை தெரியக் கூடாது என்பதற்காகவும், தான் இங்கிருந்தால் மகேஷுடன் ஆனந்திக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கை பாதிக்கும் என்றும் நினைத்து அன்பு வங்கதேசத்திற்கு வேலைக்கு செல்கிறான்.
அன்புவை அவரது தங்கையும், ஆனந்தியும், நண்பன் முத்துவும் எவ்வளவோ தடுத்தும் அன்பு தன் முடிவை மாற்றிக் கொள்ளாமல் வெளிநாட்டிற்கு கிளம்பி விட்டான்.
கேள்வி கேட்கும் தங்கை
இந்நிலையில், ஆனந்தி மேல் தனக்கு எவ்வித காதலும் இல்லை எனக் கூறிய அன்பு, இத்தனை நாள் ஆனந்தி படுத்து தூங்கிய தலையணை கவரை வெளிநாட்டிற்கு போகும் போது எடுத்துச் சென்றுள்ளார். இது அவரது தங்கைக்கு தெரியவர உடன் போன் செய்து இதுபற்றி விசாரிக்கிறார். இதையடுத்து அன்பு என்ன சொல்வது எனத் தெரியாமல் திணறி வருகிரார்.
அழகனை கண்டுபிடித்த ஆட்டோ டிரைவர்
இந்த சமயத்தில் தான் விதி அன்பு வாழ்க்கையில் விளையாடுகிறது. ஆனந்தி, எந்த ஆட்டோ டிரைவர் மூலம் அழகனை பற்றி மீண்டும் தெரிந்துகொண்டாலோ அதே ஆட்டோவில் தான் அன்பு வெளிநாட்டிற்கு செல்வதற்காக கிளம்பிச் செல்கிறான். இதையடுத்து, அழகன் தன் ஆட்டோவில் இருப்பதை எப்படியாவது ஆனந்தியிடம் சொல்லிவிட வேண்டும் எனஆட்டோ டிரைவர் ஆனந்திக்கு போன் செய்கிறார்.
உண்மையை கூற வரும் முத்து
அந்த சமயத்தில், தான் அழக் கூடாது என நினைப்பதாகவும் ஆனால், தற்போது வரை என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை எனவும் தனது தோழியிடம் கூறி வேலை நேரத்தில் அழுது கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்த முத்து, எப்படியாவது அன்பு தான் அழகன் என்பதை ஆனந்தியிடம் கூற வேண்டும் என முயற்சி செய்கிறான்.
இவர் ஆனந்தியிடம் வரும் சமயத்தில் தான் ஆட்டோ காரர் போன் செய்கிறார். தன்னுடைய போன் தான் அடிக்கிறது என்பதை அறிந்த ஆனந்தி, அதை லாக்கரில் இருந்து எடுக்க வரும் போது சிக்கிக் கொள்கிறாள். இதையடுத்து அவருக்கு அழகன் குறித்த தகவல் தெரிய வருமா? இல்லையா என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
ஆனந்தியை மகேஷிடம் விட்டுச் சென்ற அன்பு
முன்னதாக நேற்று, புது ஹாஸ்டலுக்கு செல்வதற்காக அன்பு, ஆனந்தியை மகேஷிடம் அழைத்துச் சென்றான். மகேஷும் ஆனந்தியும் புது ஹாஸ்டலுக்கு செல்ல தயாரான போது, ஆனந்தி கையில் இருக்கும் பையில் என்ன இருக்கிறது என மகேஷ் கேட்கிறான்,
இதில், அழகன் சம்மந்தப்பட்ட பொருட்கள் இருப்பதாக ஆனந்தி, கூறியதும் மகேஷால் கோவத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. எனவே, மகேஷ், ஆனந்தியின் கையில் இருந்த பையைப் பிடுங்கி தரையில் எரிகிறான். அத்துடன் எத்தனை முறை சொன்னாலும் ஏன் எதுவும் கேட்க மாட்டிங்குற என கத்துகிறார்.
கதறி அழுத ஆனந்தி
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தி, என்கிட்ட அழகனை தூக்கிப் போடச் சொல்லாதிங்க.. அது மட்டும் என்னால முடியாது என விம்மி விம்மி அழுகிறாள். அந்த சமயத்தில், மகேஷ் கோவமாக கத்தி பையை தூக்கிப் போட்ட சத்தம் கேட்டு அன்பு, வண்டியை நிறுத்தி பார்க்கிறான்.
அழகனை தன்னால் மறக்க முடியாது என ஆனந்தி கூறியதைக் கேட்டு அன்பு செய்வது அறியாது தவிக்கிறான். இதற்கிடையில் ஆனந்தியின் பழைய ஹாஸ்டல் வார்டனுக்கு சில உண்மைகள் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்