அம்பேத்கர் புத்தக வெளியீடு.. திருமாவுக்கு சென்ற அழைப்பு.. விஜய்யால் தவிர்த்த திருமாவளவன்.. நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அம்பேத்கர் புத்தக வெளியீடு.. திருமாவுக்கு சென்ற அழைப்பு.. விஜய்யால் தவிர்த்த திருமாவளவன்.. நடந்தது என்ன?

அம்பேத்கர் புத்தக வெளியீடு.. திருமாவுக்கு சென்ற அழைப்பு.. விஜய்யால் தவிர்த்த திருமாவளவன்.. நடந்தது என்ன?

Marimuthu M HT Tamil
Dec 01, 2024 03:32 PM IST

அம்பேத்கர் புத்தக வெளியீடு.. திருமாவுக்கு சென்ற அழைப்பு.. விஜய்யால் தவிர்த்த திருமாவளவன்.. நடந்தது என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

அம்பேத்கர் புத்தக வெளியீடு.. திருமாவுக்கு சென்ற அழைப்பு.. விஜய்யால் தவிர்த்த திருமாவளவன்.. நடந்தது என்ன?
அம்பேத்கர் புத்தக வெளியீடு.. திருமாவுக்கு சென்ற அழைப்பு.. விஜய்யால் தவிர்த்த திருமாவளவன்.. நடந்தது என்ன?

இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான ‘தளபதி மக்கள் இயக்கம்’ அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள்.

மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை 2024ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.

தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கை:

தொடங்கிய மூன்றே நாட்களில் அந்தக் கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.

மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.

அதன் அடுத்தகட்டமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.

அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக அறிவித்த விஜய்:

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு த.வெ.க கட்சியின் தலைவராக பேசிய விஜய் அரசியல், பொருளாதார, சமநிலையை உருவாக்கணும் என்றால், புரொபோசல் ரெபிரசன்டேஷன் (முன்மொழிவு பிரதிநிதித்துவம்) ஆக இருக்கிற சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தணும் என்றும், அப்போதுதான், எல்லாருக்கும் எல்லாம் சமநிலையாகக் கிடைக்கும் என்றும்; அது தான் சரியான சமூக நீதிக்கான அணுகுமுறையாகவும் இருக்கும் என்றும் கூறினார். மேலும், அம்பேத்கரை தன் கட்சியின் கொள்கை வழிகாட்டியாகவும் விஜய் அறிவித்தார்.

இந்நிலையில் விகடன் பிரசுரம் வெளியிடும் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் ஒரே மேடையில் தோன்ற தயக்கம் காட்டிய தொல்.திருமாவளவன்:

இந்த நூல் வெளியீட்டு விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கலந்துகொள்வார் எனப் பேசப்பட்ட நிலையில், திருமாவளவனின் பெயர் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழில் வெளியாகவில்லை.

த.வெ.கவின் கொள்கைகளில் ஆக்கப்பூர்வமானது எதுவும் இல்லை என திருமாவளவன் விமர்சனத்தை முன்வைத்தார். மேலும், திமுகவினரோடு கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், இந்த நேரம் திமுகவை விமர்சித்துப் பேசிய விஜய்யுடன் ஒரே மேடையில் தோன்றினால், அது வி.சி.கவுக்கு பின்னடைவை உண்டுசெய்யலாம் என நினைத்ததால், தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத் தவிர்த்து இருக்கிறார்.

ஆனால், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலைப் பெற்றுக்கொள்கிறார், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே. சந்துரு. இந்நிகழ்ச்சியானது வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அனுமதியும் நுழைவுச்சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. த.வெ.க. முதல் மாநாட்டுக்குப் பின் நடக்கும் முதல் பொதுநிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார், என்பதால், அந்த மேடையில் நிச்சயம் விஜய் குட்டி ஸ்டோரி சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.