பச்சை பொய் பேசிய புஷ்பாராஜ்.. புடிங்க சார், புடிச்சு ஜெயில்ல போடுங்க.. அல்லு அர்ஜுனை கைது செய்யுமாறு வைரலாகும் ஹேஷ்டாக்
Allu Arjun: சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவை கூட்டத்தின்போது பேசியுள்ளார். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
புஷ்பா 2 படத்தின் ப்ரிவியூ ஷோ பார்க்க சென்று கூட்ட நெரசலில் சிக்கி பெண் ஒருவர் உயரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த பெண்ணின் 9 வயது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக புஷ்பா 2 படத்தின் ஹீரோவும், தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டாருமான அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் கைது சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரெண்டாகும் #alluarjunarrested ஹேஷ்டாக்
சந்தியா திரையரங்கம் நெரிசல் சம்பவம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, டிசம்பர் 21ஆம் தேதி தெலங்iகானா சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது கருத்து தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அக்பருதின் ஒவைஸி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, “அல்லு அர்ஜுனின் செயலால் தான் திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது” என்றார்.
முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டை அடுத்து, செய்தியாளர் சந்திப்பு நடித்து அல்லு அர்ஜுனும் விளக்கம் அளித்தார். இதுகுறித்து பேசிய அல்லு அர்ஜுன், " சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தான். நான் பேரணி நடத்தியதாக கூறுவது தவறு. சம்பவம் நடந்த அடுத்த நாள் தான் அந்த பெண் இறந்தது தெரிய வந்தது. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும், என்னை அவமானப்படுத்தும் முயற்சியும் நடக்கிறது" என்றார்.
இதைத்தொடர்ந்து, அல்லு அர்ஜுன் திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கும் விடியோ ஒன்று வைராகி வரும் நிலையில், #AlluArjunArrested என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது
என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்
ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு பின்னர், அல்லு அர்ஜுன் அதற்கு விளக்கம் அளித்திருக்கும் நிலையில், தற்போது சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அத்துடன் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் பேசியதில் உள்ள நியாயத்தையும் எடுத்துரைத்து கருத்துகளும் பகிரப்பட்டு வருகிறது.
"சம்பவம் நடந்த சந்தியா திரையரங்கம் உள்ள பகுதியில் ஏராளமான ஹோட்டல்கள் இருக்கும் பகுதி என்பதால், பாதுகாப்பு கருதி அங்கு வரவேண்டாம் என போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அதை பொருப்படுத்தாமல் அல்லு அர்ஜூன் அங்கு சென்று படம் பார்த்துள்ளார். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திரையரங்குக்கு வெளியே ஒருவர் உயிரிழந்துவிட்டார். கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது என போலீசார் அல்லு அர்ஜுனிடம் போலீசர் தெரிவித்த பிறகும், அவர் கண்டுகொள்ளாமலும், புறப்படாமலும் இருந்துள்ளார்.
பின்னர் போலீசார் அவரிடம் அங்கிருந்து உடனடியாக புறப்படாவிட்டால் கைது செய்வோம் என கூறி கட்டாயபடுத்திய பின் தான் அங்கிருந்து புறப்பட்டார். அதன் பின்னரும் வெளியே சென்று காரின் மேற்கூரையை திறந்து ரோடு ஷோ நடத்துகிறார். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்?" முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்த சம்பவம் தொடர்பாக காட்டமாக பேசியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன், ஒரு நாள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவரை காண வீட்டுக்கு செல்லும் நடிகர்கள் பலர் ஆதரவாகவும் பேசுகிறார்கள். அல்லு அர்ஜுன் கை, கால்களை இழந்துவிட்டாரா? இல்லை கிட்னி, கண் பறிபோய்விட்டதா?. இந்த சம்பவத்தில் திக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை யாரும் சென்று பார்க்காமல் இருக்கிறார்கள்" எனவும் கூறினார்
வைரலாகும் விடியோ
ரேவந்த் ரெட்டி மற்றும் அல்லு அர்ஜுனின் கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் தங்கள் வாதங்களை முன் வைத்து பல விடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அல்லு அர்ஜுன் திரையரங்கில் அமர்ந்து ரசிகர்களுடன் படம் பார்க்கும் விடியோவும், திரையரங்கை விட்டு ரசிகர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரும விடியோவும் பகிரப்பட்டு வருகிறது. மிக முக்கியமாக சந்தியா திரையரங்கம் வெளியே அல்லு அர்ஜுன் திறந்த காரில் கையசைத்தவாறு செல்லும் விடியோ ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த விடியோக்களையெல்லாம் பார்த்த ரசிகர்கள் பலரும் அல்லு அர்ஜுன் பச்சை பொய் செல்வதாகவும், அவரை கைது செய்யுமாறும் சொல்லி #AlluArjunArrested ஹேஷ்டாக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.