AK63: ஷாலினி கொடுத்த அஜித் பட அப்டேட்! - ஆர்ப்பரிப் பில் அஜித் ரசிகர்கள்! - இயக்குநர் யார் தெரியுமா?
விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் வெளியாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. அதனால் அஜித் ரசிகர்கள் விடா முயற்சி அப்டேட்டிற்காக காத்து இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அஜித்தின் 63 ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது

Ak63 update
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கினார். பொங்கல் பரிசாக வெளியான இந்தத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில் தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 ஆவது படத்தில் கமிட் செய்யப்பட்டார். முதற்கட்டமாக இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகிறது.