தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Director Suraj Reveals Ajith And Vijay Offered Cop Role For Same Film And They Opted Out

Director Suraj: அட்வான்ஸ் வாங்கி நடிக்காமல் போன விஜய்! கதை பிடித்தும் வடிவேலுவால் நடிக்காத அஜித் - படம் சூப்பர் ஹிட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 13, 2024 07:03 PM IST

விஜய், அஜித் குமார் என இருவருக்கும் கதை பிடித்தும் அவர்கள் நடிக்க மறுத்த படம் வடிவேலுவின் காமெடி கதாபாத்திரத்தால் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இது பற்றி இயக்குநர் சுராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கதை பிடித்திருந்தும் விஜய்., அஜித் நடிக்க மறுத்த படம்
கதை பிடித்திருந்தும் விஜய்., அஜித் நடிக்க மறுத்த படம்

ட்ரெண்டிங் செய்திகள்

 சூப்பர் ஹிட்டான படம் மருதமலை. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை சுராஜ் இயக்கியிருந்தார். படத்தில் அர்ஜுன், வடிவேலு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் வடிவேலுவின் கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த மருதமலை திரைப்படம், நல்ல வசூலையும் பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் கதை விஜய், அஜித் குமார் என இருவரிடம் தெரிவித்த நிலையில், அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் போலீஸ் கதாபாத்திரம் காரணமாக நடிக்க மறுப்பு தெரிவித்ததாக இயக்குநர் சுராஜ் தெரிவித்துள்ளார்.

அட்வான்ஸ் வாங்கிய பின் விலகிய விஜய்

இதுகுறித்து இயக்குநர் சுராஜ் பிரபல யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "இந்த படத்தின் கதை விஜய்க்கு பிடித்துபோக நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கு அட்வான்ஸ் தொகையும் வழங்கப்பட்டது. படத்தின் திரைக்கதை முழு வடிவம் பெற்று விஜய் நடித்திருந்தால் அது விஜய்யின் முதல் போலீஸ் படமாக அமைந்திருக்கும்.

விஜய் தனது டேட்களை கலைப்புலி தாணுவின் சச்சின் படத்துக்காக கொடுத்திருந்தார். தெலுங்கு திரைப்படம் நீத்தேவின் ரீமேக்காக உருவான சச்சின் தமிழில் சூப்பர் ஹிட்டானது" என்றார்.

வடிவேலுவால் நடிக்க மறுத்த அஜித்

இந்த படத்தின் கதையை விஜய்க்கு அடுத்து அஜித்திடமும் கூறப்பட்டது. ஆனால் போலீஸ் வேடம், வடிவேலு படத்தில் நடிப்பது உள்ளிட்ட காரணங்களால் அவர் தவிர்த்துள்ளார்.

இதுகுறித்து சுராஜ் கூறியதாவது, "இந்த கதையை அஜித்திடமும் கூறினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தாலும், க்ரீடம் படத்தில் ஏற்கனவே போலீஸ் வேடத்தில் நடிப்பதால் அவர் ஆர்வம் காட்டவில்லை. அத்துடன் படத்தில் வடிவேலு இருந்ததால் அவருடன் இணைந்து பணியாற்றவில்லை" என்றார்.

காமெடியில் கலக்கிய அர்ஜுன் - வடிவேலு காம்போ

ஏற்கனவே கிரி படத்தில் அர்ஜுன் - வடிவேலு காம்போ காமெடியில் கலக்கியிருப்பார்கள். அந்த படத்தி்ல் இயக்குநர் சுராஜ் உதவியாளராக பணியாற்றியிருந்தார்.  கிரி படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றியை பெற்றது. 

இதைத்தொடர்ந்து இந்த சக்சஸ் காம்போவை மீண்டும் மருதமலை படத்தில் இணைந்திருப்பார் இயக்குநர் சுராஜ். படத்தில் காமெடி காட்சிகள் பெரிதாக பேசப்பட்டதோடும், ரசிகர்களையும் கவர்ந்து ஹிட்டானது.

படத்தில் என்கவுண்டர் ஏகாம்பரம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி வடிவேலு பட்டையை கிளப்பியிருப்பார். கதாநாயகியாக நிலா நடித்திருப்பார். ரகுவரன், நாசர், லால் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். மருதமலை படத்துக்காக வடிவேலு சிறந்த காமெடியன் என்ற தமிழ்நாடு அரசின் மாநில விருதையும் வென்றார். 

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்கிய பின்பு விஜய் நடிப்பில் வெளியாகம் படமாக இருப்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளிநாடுகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த இரு படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்