தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Lakshmi: சினிமாவில் நீடிக்க நடிகைகள் கவர்ச்சிக்கு மாறுவது கட்டாயம் - ஐஸ்வர்யா லட்சுமி!

Aishwarya Lakshmi: சினிமாவில் நீடிக்க நடிகைகள் கவர்ச்சிக்கு மாறுவது கட்டாயம் - ஐஸ்வர்யா லட்சுமி!

Divya Sekar HT Tamil
Sep 22, 2023 11:33 AM IST

சினிமாவில் நடிக்க கவர்ச்சி முக்கியம் என்று ஐஸ்வர்யா லட்சுமி கருத்து தெரிவித்து உள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அவரின் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இது வரையில் அவர் நடித்த படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார் ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் நடித்த கட்டா குஸ்தி படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமாவில் நடிக்க கவர்ச்சி முக்கியம் என்று ஐஸ்வர்யா லட்சுமி கருத்து தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, “இன்றைய சூழ்நிலையில் நடிகைகள் கவர்ச்சிக்கு மாறுவது கட்டாயம் ஆகிவிட்டது. கவர்ச்சி இல்லையென்றால் சினிமாவில் நீடிக்க முடியாது”என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்