தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aiadmk Ex-executive Av Raju's Explanation Regarding Defamatory Talk About Actress Trisha

Trisha: ’த்ரிஷா மாதிரிதானே தவிர த்ரிஷா இல்ல!’ முன்னாள் அதிமுக நிர்வாகி பல்டி!

Kathiravan V HT Tamil
Feb 20, 2024 08:48 PM IST

”என் கருத்தால் த்ரிஷா மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்”

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி.ராஜூ - நடிகை த்ரிஷா
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி.ராஜூ - நடிகை த்ரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பேட்டி இணைய தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி.ராஜூ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகை த்ரிஷா ட்வீட் செய்துள்ளார். 

இந்த நிலையில், தனது பேச்சு குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி.ராஜூ விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னை கட்சியை விட்டு நீக்கியது குறித்தும், என்னிடம் வெங்கடாசலம் சொன்னது குறித்தும் மட்டுமே பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளேன்.  எனக்கு தர வேண்டிய பணத்தை தராதது குறித்து ஈபிஎஸின் மனு கொடுத்தேன். ஆனால் அதனை அவர் விசாரிக்கவில்லை என்பதுதான் பிரச்னை. 

எனக்கு அந்த பெண்ணை பற்றியோ, நடிகரை பற்றியோ யார் என்றே தெரியாது. முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம்  பேசியது, த்ரிஷா மாதிரி என்று சொன்னாரே தவிர, அது த்ரிஷா என்று சொல்லவில்லை. 

நான் பேசிய வார்த்தையை சில தொலைக்காட்சிகள் தவறாக ஒளிபரப்பு செய்கிறார்கள். கூவத்தூருக்கு நான் சென்றபோது, அவர் இது குறித்து கூறினார். அழகான ஒரு சின்ன பெண் என்றுதான் பேசினாரே தவிர, நடிகை என்று சொல்லவில்லை. நான் கருணாஸ் பற்றி பேசவில்லை, கருணாஸ் அண்ணனும் இருந்தாரு,  இதனை அண்ணன் சேரன் அவர்களும், விஷால் அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். என் கருத்தால் த்ரிஷா மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என கூறி உள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்