“மகளை என்னையும் வழிமறித்து டார்ச்சர் செய்து”.. முன்னாள் மனைவி கொடுத்த புகார்! - சிறுத்தை சிவா தம்பி பாலா கைது!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “மகளை என்னையும் வழிமறித்து டார்ச்சர் செய்து”.. முன்னாள் மனைவி கொடுத்த புகார்! - சிறுத்தை சிவா தம்பி பாலா கைது!

“மகளை என்னையும் வழிமறித்து டார்ச்சர் செய்து”.. முன்னாள் மனைவி கொடுத்த புகார்! - சிறுத்தை சிவா தம்பி பாலா கைது!

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 14, 2024 08:24 AM IST

முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், சிறுத்தை சிவா தம்பியும், நடிகருமான பாலாவை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

“மகளை என்னையும் வழிமறித்து டார்ச்சர் செய்து”.. முன்னாள் மனைவி கொடுத்த புகார்! - சிறுத்தை சிவா தம்பி பாலா கைது!
“மகளை என்னையும் வழிமறித்து டார்ச்சர் செய்து”.. முன்னாள் மனைவி கொடுத்த புகார்! - சிறுத்தை சிவா தம்பி பாலா கைது!

பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரில், “ பாலா என்னையும், என்னுடைய மகளையும் வழிமறித்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனையடுத்து கடவந்திரா காவல்துறை, எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டில் வைத்து அவரை கைது செய்திருக்கின்றனர். போலீசார் தரப்பில் அவரை இன்றைய தினம் மாலை நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பாலா
பாலா

யார் இந்த பாலா?

தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசு கிசு’,‘வீரம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார். மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் இவர், கடந்த 2010ம் ஆண்டு பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்த தம்பதிக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இதற்கிடையே பாலா கடந்த 2021-ம்ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த நிலையில் அண்மையில் பாலா கொடுத்த சில பேட்டிகளில் மகள் அவந்திகா குறித்து பேசி இருந்தார். இதற்கு அவந்திகா பதிலடி கொடுத்திருந்தார். அதில், “என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாகவும், எனக்கு அதிகமான பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகவும் பேட்டிகளில் பேசி வருகிறார். ஆனால், அதில் உண்மை இல்லை. உண்மையில் அவரை நேசிக்க எனக்கு சின்ன காரணம் கூட கிடையாது.

மகள் வைத்த குற்றச்சாட்டு

அவர் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவர் என்னையும், என்னுடைய அம்மாவையும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்தததுதான் தற்போது கண்முன் வருகிறது. நான் அந்த நேரத்தில் குழந்தையாக இருந்ததால், அம்மாவுக்கு என்னால் உதவ முடியவில்லை. என் மீது உங்களுக்கு உண்மையிலேயே பாசமிருந்தால் என் வாழ்க்கையில் குறுக்கீடாதீர்கள்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து இருந்த பாலா, “ என்னை அப்பா என்று அழைத்ததற்கு நன்றி மகளே. நான் உன்னுடன் வாக்கு வாதம் செய்ய விரும்பவில்லை. ஒருவன் மகளுடன் வாக்குவாதம் செய்தால் அவன் மனிதனே இல்லை. நான், உனக்கு 3 வயதாக இருக்கும்போது நான் உன் மீது பாட்டிலை வீச முயன்றதாகவும், உன்னை, 5 நாட்கள் பட்டினி போட்டு கொடுமை படுத்தியதாகவும் பேசி இருக்கிறாய். இது குறித்து,  உன்னிடம் வாக்குவாதம் செய்து என்னால் ஜெயிக்க முடியும். ஆனால், இங்கு நீ வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் உன்னிடம் சரணடைகிறேன். இனி நான் உன் வாழ்க்கையில் குறுக்கிடம்மாட்டேன்.” என்று கூறியிருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.