மனைவி வராததால் கோபித்துக்கொண்டு அம்மா வீடு போனேன்..பின் பாசமாக பேசி அழைத்து அடித்து துவைத்த மனைவி.. அகோரி கலையரசன் பகீர்
மனைவி வராததால் கோபித்துக்கொண்டு அம்மா வீடு போனேன்..பின் பாசமாக பேசி அழைத்து அடித்து துவைத்த மனைவி.. அகோரி கலையரசன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
தன் மனைவி தன்னோடு வாழ வராததால், கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டேன் என்றும், அதன்பின் பாசமாகப் பேசி அழைத்து தன் மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்தினார்கள் எனவும் இன்ஸ்டா பிரபலம் அகோரி கலையரசன் பரபரப்பு பேட்டிக்கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘’என் மனைவியை தனிக்குடித்தனம் நடத்தச்சொல்லி அழைத்தேன். அவங்க என்ன சொன்னாங்க என்றால், அவங்களுடைய குடும்பத்தினரோடு தான் இருப்போம்ன்னு சொன்னாங்க. அதனால் நான் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டேன். அம்மா வீட்டில் இருந்து ரொம்பப் பாசமாகப் பேசிறமாதிரி வரவழைச்சாங்க.
திண்டிவனத்தில் ஒரு இடம் விஷயமாகப் போயிருந்தோம். அதை முடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வந்ததும் கதவை மூடிக்கிட்டு, செல்போன் எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு, சாகுடா சாகுடான்னு சொல்லி அடிச்சு சித்திரவதை பண்ணுனாங்க.
அடிமேல் அடி - அகோரி கலையரசன் பேட்டி:
அடுத்தநாள் அவங்ககிட்ட பேசி கோயிலில் பூஜைக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்புனேன். அவங்க அப்பாவையும் என்கூட அனுப்பி வைச்சாங்க. எப்படியோ வெளியில்போயிட்டு, அம்மாவுக்குப் போன் அடிச்சு அழுதேன். இந்த மாதிரி அடிச்சு சித்ரவதைப் பண்றாங்கன்னு. அடுத்து வழக்கறிஞருக்கு போன் செய்து விவாகரத்து செய்ய ஆவனங்களைத்தயார் செய்யுங்கன்னு சொல்லிட்டு, அம்மா ஊர் பழனிக்கே போயிடலாம்ன்னு கிளம்பும்போது, வழக்கறிஞர் சில இடங்களில் கையெழுத்துப் போடனும் சொன்னாங்க. அதனால், ஒரு நாள் இரவு தங்கும் சூழ்நிலை உருவானது. கோயிலில் இருந்தால் மச்சான் வந்து அடிப்பான். அவங்க வீட்டுக்குப்போனால் மீண்டும் அடிப்பாங்கன்னு பயந்துகிட்டு, தெரிஞ்சவங்க வீட்டில் போய் படுத்திருந்தேன்.
அந்த வீடியோ நீங்கள் பார்த்திருப்பீங்க. அது விபச்சாரி வீடு எல்லாம் கிடையாது. அது ஒரு அபார்ட்மென்ட். எந்த ஒரு விபச்சாரி வீட்டிலும் சிசிடிவி வைக்கமாட்டாங்க. பக்கத்தில் குடும்பங்கள் வசிக்கமாட்டாங்க. இதற்கு முழுக்க முழுக்க என்ன காரணம் என்றால், என் மனைவிக்கு ஆடம்பர வாழ்க்கைத்தேவை. அதற்கு சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிக்க சொல்றாங்க. என்னால் முடியாது. ஆன்மிகத்தில் இருந்துட்டு தவறான வழிகளுக்குப் போக எனக்கு விருப்பமில்லை. இரண்டாது எங்க அம்மா, எங்க அக்கா கூடப் போறேன்னு சொன்னது என் மனைவிக்கு ரொம்ப காண்டு ஆயிடுச்சு. அந்த வீட்டில் இருந்து அடிச்சு என்னைக் கூப்பிட்டுட்டு வந்து, கோயில் முன்னாடி உட்காரவைச்சு, அடி அடின்னு அடிச்சு, நான் விபச்சாரிகிட்டே போனேன் வாக்குமூலம் வீடியோ எடுத்தார்கள்.
இதைப் பார்த்தவர்கள் மீடியாவிலும் பேட்டி கொடுத்திருக்காங்க. இப்போது நான் விவாகரத்து மூவ் செய்திருக்கோம். கமிஷனர் ஆபிஸில் புகார் கொடுத்து அதனுடைய விசாரணைக்காக வந்திருக்கோம்.
கொலை மிரட்டல் விடுறாங்க - அகோரி கலையரசன்
எங்களுக்கு சென்னை வரவே பயமாக இருக்கு. அந்தளவுக்கு மிரட்டல் விட்டுட்டே இருக்காங்க. ஒரு நிமிஷத்தில் வெட்டிப்போட்டுடுவோம். குத்திப்போட்டுடுவோம்னு சொல்லி என் மனைவியும் மச்சானும் மிரட்டுறாங்க.
அன்னிக்கு கோயிலில் அடிச்சி, கூட்டிட்டுப் போனாங்க இல்லையா, அன்னிக்கும் முன்பே அவங்க வீட்டில் நான்கு பேரை செட் செய்துவைச்சிட்டாங்க.
அப்போது ட்ரெயினில் ஏறும்போது சொல்றாங்க, ‘ நீ மட்டும் தான் சம்பாதிச்சுக் கொடுக்கணுமா, நான் நான்கு பேர்கூடபோய் கூட சம்பாதிச்சுக்குவேன். வீட்டுக்கு வா உன்னை மருந்தை வைச்சு கொல்றேன்னு சொன்னாங்க’. அதனால் பாதியிலேயே ட்ரெயின்லயிருந்து இறங்கி என் அம்மா வீட்டுக்குப் போயிட்டேன்.
இதனால் என் உயிருக்குப் பாதுகாப்பு வேணும். கோடிக்கணக்கில் பணம் வரும் இல்லையா, அதை மாத்திவிடச் சொல்றாங்க. அது என்னால் செய்யமுடியாது. கோயிலில் பல பெண்களை தவறாக அணுகினதா சொல்றாங்க. அது முழுக்க முழுக்க போலியான குற்றச்சாட்டு தான். ஒரு பெண்ணாவது என் மேல் புகார் கொடுத்திருக்கணும் இல்லையா. ஆந்திராவில் இருந்து ஒரு பொண்ணு வந்து கலையரசன் தவறான ஆள் இல்லைன்னு பேட்டி கொடுத்திருக்காங்க. என்னோட நற்பெயரை கெடுக்க முயற்சிசெய்யுறாங்க. ஒரு ஆண் மீது குற்றச்சாட்டு வைக்கணும் என்றால், இப்படிதான் பொய்க்குற்றச்சாட்டு வைப்பாங்க. என்னை ஹவுஸ் அரஸ்ட் பண்ணி அடிக்கிறாங்க. அதனால் காவல்துறை தான் உரியமுறையில் விசாரிச்சுக் கொடுக்கணும்’’ என அகோரி கலையரசன் பேட்டியளித்தார்.
டாபிக்ஸ்