தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nenjathai Killathe: கௌதமை பார்க்க வந்த மது.. மயங்கி விழுந்த அதிதி! புது காதல் ரூட்டில் நெஞ்சத்தை கிள்ளாதே

Nenjathai Killathe: கௌதமை பார்க்க வந்த மது.. மயங்கி விழுந்த அதிதி! புது காதல் ரூட்டில் நெஞ்சத்தை கிள்ளாதே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 05, 2024 03:04 PM IST

கெளதமை பார்ப்பதற்காக வரும் மது, ஆடிஷன் நடக்கும் இடத்தில் மயங்கி விழுந்த அதிதி என திருப்பங்களுடன் புது காதல் ரூட்டில் நெஞ்சத்தை கிள்ளாதே கதை பயணிக்கிறது. நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்

கௌதமை பார்க்க வந்த மது, மயங்கி விழுந்த அதிதி என்று புது காதல் ரூட்டில் செல்லும் நெஞ்சத்தை கிள்ளாதே
கௌதமை பார்க்க வந்த மது, மயங்கி விழுந்த அதிதி என்று புது காதல் ரூட்டில் செல்லும் நெஞ்சத்தை கிள்ளாதே

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மது கௌதமை பார்க்க வீட்டுக்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கெளதமை பார்க்க செல்லும் மது

அதாவது, மது கௌதமை பார்க்க வேண்டும் என்று சொல்ல செக்யூரிட்டி மேலே வந்து கௌதமிடம் உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருப்பதாக சொல்ல அவன் இப்போ பார்க்க முடியாது என்று சொல்கிறான்.

இதையடுத்து செக்யூரிட்டி மேலே பங்ஷன் நடந்திட்டு இருக்கு, அதனால் சாரை இப்போ பார்க்க முடியாது வெயிட் பண்ணுங்க என்று சொல்ல மது வெளியே காத்துக் கிடக்கிறாள்.

மறுபக்கம் மதுவின் அம்மாவும் தங்கையும் ஆடிஷனுக்கு வர லிஸ்டில் அவர்கள் பெயர் இல்லாததால் சத்தம் போட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். கௌதம் அவனது இரண்டாவது தங்கச்சி மாயாவின் கல்யாண பேச்சை எடுக்கின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

மயங்கி விழும் அதிதி

இங்கே ஆடிஷன் நடக்கும் இடத்தில மதுவின் தங்கச்சி அதிதி மயங்கி விழ அவளது அம்மா மகன் ஜீவாவுக்கு போனை போட்டு வர சொல்ல ஜீவா வருகிறான். ஜீவாவும் மாயாவும் ஏற்கனவே காதலித்து வருகின்றனர் என்ற விஷயம் தெரிய வருகிறது.

கௌதம் வீட்டில் உறவினர்கள் மாயா கேரக்டர் குறித்து தப்பாக பேச கௌதம் என் தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சவால் விடுகிறான்.

மது அவனை பார்ப்பதற்காக வெளியில் காத்துக் கொண்டிருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

புதிய சீரியலாக நெஞ்சத்தை கிள்ளாதே

கடந்த 2014இல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எஸ்.பி.பி. சரண், ரேணுகா, சோனியா ஆகியோர் நடிப்பில் ஏற்கனவே நெஞ்சத்தை கிள்ளாதே என்ற பெயரில் சீரியல் ஒளிபரப்பானது.

இதைத்தொடர்ந்து தற்போது அதே பெயரில் ரோஜாவனம், ரோஜாக்கூட்டம், ராமகிருஷ்ணா, காற்றுள்ளவரை போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷ், விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோயினாக நடித்த ரேஷ்மா முரளிதரன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

நெஞ்சத்தை கிள்ளாதே கதை

நெஞ்சத்தை கிள்ளாதே தொடர் நந்தினி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது, அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கிறார். பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் காண பாடுபடுகிறார்.

இந்தத் தொடர் காதல், துரோகம் மற்றும் குடும்ப உறவு ஆகியவற்றை உணர்வுபூர்வமாக சொல்கிறது.

நந்தினியின் போராட்டங்கள், வெற்றிகள் நிறைந்த பயணத்தில் காதல், பாசம் போன்றவற்றின் கலவையுடன் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திருப்பங்களுடன் கதை அமைந்துள்ளது. நெஞ்சத்தை கிள்ளாதே ஒரு பெண்ணின் விடாமுயற்சியாக கதை மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.