வானத்தை போல விஜயகாந்த் மாதிரி வாழ ஆசைப்பட்டேன் .. கஷ்டம் தான்.. எங்களுக்கு வீடு கூட இல்ல - மனம் திறந்த நடிகர் விதார்த்!
உங்க படம் நல்லா இருக்கு.. ஓ இது பாப்பாவான்னு நல்லா பேசுவாங்க. ஆனா நாம வீடுன்னு பேசுறப்ப மட்டும் இல்ல வீட்டில் கேட்டு சொல்லுறோம் அப்படின்னுவாங்க. இந்த வீட்ட வித்தால் அல்லது வாடகைக்கு விட்டாலோ நாம வரணும்னு எல்லார் கிட்டயும் சொல்லிக்கிட்டே இருந்தேன். எனக்கு இந்த வீடே கிடைச்சது

நடிகர் விதார்த் தன் மனைவி காயத்திரியுடன் அவள் விகடன் யூ டியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் பேசிய விதார்த், "நா முதலில் கல்யாணம் பண்ற ஐடியாலயே இல்ல. வானத்தை போல விஜயகாந்த் மாதிரி அண்ணன் தம்பிகளுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வச்சு அவங்க பிள்ளைகளை கொஞ்சி அப்படியே இருந்திடலாம் என்று நினைத்தேன். ஆனா என் தம்பிங்க எல்லாம் வந்து நீ கண்டிப்பா கல்யாணம் பண்ணணும் என்றார்கள். அதனால் சரி நமக்கு பிடித்த ஒரு பொண்ணா இருக்கணும் என்று நினைத்தேன். என் தம்பி பிரெண்டு வந்து இவங்க பிரெண்டு. அவன் போட்டோ அனுப்பினான். இவங்க காயத்திரி. இவங்க பழனி. ஓகேவா அப்படின்னான். போட்டோ பார்த்தேன். சரிடா பேசுவோம்டா அப்படின்னேன். ஆனா அவங்கட்ட இருந்து ரிப்ளே வரல. சரின்னு வேற ஒரு பொண்ணு பார்க்க நா கோயம்முத்தூர்ல நேச்சுரோபதில இருந்தேன். அப்பதான் இவங்க போன் வந்தது. ஒரு 10 நிமிடம் இரண்டு பேரும் பேசினோம். பேசின உடனே சென்னை வந்து இவங்கள வந்து பார்தோம். இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. இரண்டு பேர் வீட்டுலயும் பேசினாங்க எல்லாரும் ஓகேன்னாங்க..
நீயும் நானும் தான கல்யாணம் பண்ண போறோம்
இடையில் எங்க அம்மா பொண்ணு வேணாம் அப்படின்னாங்க. அப்ப இவங்க என்ட கல்யாணம் நீயும் நானும் தான பண்ண போறோம். எனக்கு ஏதோ ஏமாத்துற பீல் மாதிரி கில்டியா இருந்தது. நைட்டு எல்லாம் ஒரு மாதிரி பதட்டமா இருந்தது. போன்லாம் ஆப் பண்ணிட்டே. அப்பறம் காலைல வந்து சரிடா பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிடாங்க. அவங்களுக்கு என்னனா அவங்க ஜாதகம் பார்த்ததுல ஏதோ சொல்லிருக்காங்க அப்பறம் அவங்க இரண்டு பேரும் நல்லா இருப்பாங்கன்னு சொல்லிட்டதால 3 மாசத்தில் கல்யாணம் முடிந்தது என்றார் விதார்த்.
விதார்த் கூட 40 நாள்
எங்களுக்கு கல்யாணம் அப்படின்னு பேசி முடிச்ச டைம்லதான் விதார்த் குற்றமே தண்டனை படம் முடிச்சு வச்சிருந்தார். அத அடுத்து ரிலீஸ் பண்ணணும். 6 மாதம் ரொம்ப ஸ்ட்ரகுல். அந்த படத்தை கொண்டு போய் சேர்க்க ரொம்ப கஷ்டப்பட்டார் விதார்த். அந்த படத்த மார்க்கெட் பண்றது, தியேட்டர் பேசுறதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டார். இரண்டு பேரும் சேர்ந்தே அத பேஸ் பண்ணினோம்.
அதுக்கு பின்னாடி ரிலீஸ் பண்ணார். அந்த படம் வசூல் ரீதியா நல்லா போகவில்லை என்றாலும் அதுதான் ஒரு பிரேக் மாதிரி இருந்ததுன்னு நா பீல் பண்னேன். அதுக்கு பிறகு தான் ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை எல்லாம் பண்ணார். ஒரு கிடாயின் கருணை மனு எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த படம் 40 நாட்கள் அந்த படப்பிடிப்பு நடந்தது. நானும் 40 நாளும் விதார்த் கூடதான் இருந்தேன். ராஜபாளையத்தில் ஒரு காட்டுக்குள்ள நடந்தது. விதார்த்துக்கும் , ரவீனாவுக்குமாவது கேரவன் இருந்தது. மற்ற 35 பேரும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அந்த படம் ரொம்ப நல்லா வந்தது.
அந்த ஒரு வருடத்திற்குள் நான் எல்லாமே பார்த்துட்டேன். ஒரு படம் எப்படி எடுப்பாங்க. அத எப்படி மார்க்கெட் பண்றாங்க. அது மக்கள்ட எப்படி போய் சேர்கிறதுன்னு எல்லாத்தயும் நாங்க அந்த ஒரு வருடத்தில் பார்த்து விட்டோம். அவரு ரொம்ப பழகினதுன்னு பார்த்தோம்னா அவங்க அம்மாவும் சிஸ்டரும் மட்டும் தான் அடுத்து என்கிட்டதா பழகிருக்கார் என்கிறார் காயத்திரி.
இந்த ஹீரோயின் பேரு என்ன.. எந்த படத்தில் நடிச்சுருக்காங்க அப்படின்னு எல்லாம் கேட்பார்.
அப்போது பேசிய விதார்த், பொண்ணுங்கள பார்ப்போம். இவங்க எல்லாம் எங்கயோ பார்த்துருக்கலாம்ன்னு தோணும் ஆனா எங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாது.
ஒரு பெரிய ஹீரோயின பார்த்த போது என்னோட எல்லா படத்தையும் பற்றி வரிசையா சொன்னாங்க.. அவங்க கிட்டயே நான் சாரி உங்க பேரு தெரிஞ்சுக்கலாமான்னு கேட்டேன். அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க. அப்பறம் நான் போய் சாரி எல்லாம் கேட்டேன்.
நாங்க கல்யாணம் ஆன உடனே கஷ்டப்பட்டோம். கிடாயின் கருணை மனு படத்தில் எல்லாம் அட்வான்ஸ் தொகை கூட இல்ல சம்பளம். நாங்க தனியா இருக்கணும் என்று முடிவு பண்ணி வந்த போது எங்களுக்கு வீடு கூட இல்ல. ஆபீஸ்ல வந்து படுத்துப்போம். காலைல அசிஸ்டெண்ட் டைரக்டர் வீட்டுல மனைவிய விட்டுட்டு போயிடுவேன். கார கூட வித்துட்டு பைக்ல தான் சுத்திட்டு இருந்தோம்.நடிகர்களுக்கு வீடு தேடுறது ரொம்ப கஷ்டம். உங்க படம் நல்லா இருக்கு.. ஓ இது பாப்பாவான்னு நல்லா பேசுவாங்க ஆனா நாம வீடுன்னு பேசுறப்ப மட்டும் இல்ல வீட்டில் கேட்டு சொல்லுறோம் அப்படின்னுவாங்க. இந்த தெருவில் இந்த வீட்டை பாக்கும் போது எல்லாம் இந்த வீட்ட வித்தால் அல்லது வாடகைக்கு விட்டாலோ நாம வரணும்னு எல்லார் கிட்டயும் சொல்லிக்கிட்டே இருந்தேன். எனக்கு இந்த வீடே கிடைச்சது என்று சந்தோசமாக சொல்கிறார் விதார்த்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்