அப்போ சமந்தா.. இப்போ இவரா? புஷ்பா 2வில் ஆட்டம் போட்ட நடிகை யார் தெரியுமா? கசிந்த ரகசியம்
புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஒரு பாடல் உலகம் முழுவதும் வைரலான நிலையில், அதேபோன்ற பாடல் 2ம் பாகத்திலும் உள்ளது எனவும் அதில் நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர- தமிழக எல்லைப் பகுதியில் மட்டுமே உள்ள செம்மரக் கட்டைகளை கடத்தும் கும்பல் குறித்த திரைப்படம் புஷ்பா. 2021ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சுகுமார் இயக்க, அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, சுனில், ஃபகத் ஃபாசில் என முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
கடத்தல் மன்னனான அல்லு அர்ஜூன்
தந்தையால் கைவிடப்பட்ட புஷ்பராஜ் என்ற இளைஞர், கடன் பிரச்சனையால் அவதியுறும் தாயை காப்பாற்ற செம்மரக் கடத்தல் தொழிலில் இறங்கி, பின் அந்தத் தொழிலில் எப்படி பெரிய ஆளாக மாறுகிறார் என்பதும், அவருக்கு எப்படி, யாரால் எல்லாம் பிரச்சனை வருகிறது என்பது தான் கதை. இப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி, அல்லு அர்ஜூனை இந்திய அளவில் பிரபலமாக்கியது.
ஊ சொல்றியா மாமா பாடல்
மிகப்பெரிய பொருட்செலவில் உருவான புஷ்பா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் ஹிட் அடித்திருந்தாலும், சமந்தா நடனத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் மட்டும் அல்ல உலகளவிலும் ட்ரெண்ட் ஆனது. அந்தப் பாட்டில் உள்ள வரிகளும், பாடல் படமாக்கப்பட்ட விதமும் பலராலும் பேசப்பட்டது.