"நாக சைதன்யாவின் 2ம் திருமணமும் நிலைக்காது" ஜோசியம் சொன்னவரை சுத்து போட்ட கோர்ட்! அட்டாக் மோடில் மக்கள்
நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா திருமணம் நிலைக்காது என ஜோதிடம் பார்த்துக் கூறிய பிரபல ஜோதிடர் வேணு சுவாமியிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் நாக சைதன்யா- நடிகை ஷோபிதா துலிபாலாவிழ் திருமண ஏற்பாடுகள் டோலிவுட் முழுவதும் பரபர்ப்பாக பேசப்படும் நிலையில், பிரபல ஜோதிடர் அவர்களின் ஜாதகத்தைக் கணித்து, அவர்களுக்குள் ஒரு பெண்ணால் பிரச்சனை ஏற்படும். அவர்கள் இருவரும் 3 வருடத்தில் பிரிந்து விடுவார்கள். இவர்கள் இருவரின் ஜாதகமும் 10 சதவீதம் தான் பொருந்திப் போகிறது எனக் கூறி இருந்தார்.
ஜோதிடருக்கு சுத்து போட்ட கோர்ட்
இவரது ஜோதிடக் கணிப்பு மிகவும் வைரலான நிலையில், வேணு சுவாமி மீது தெலுங்கு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோதிடர், மன்னிப்புக் கோரியதுடன் தன்னை மகளிர் உரிமை ஆணையத்தினர் விசாரிக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்றம் ஜோதிடர் பேசிய விவகாரம் குறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மகளிர் உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.