எனக்கும் அம்மா ஆகணும்னு ஆசை இருக்கு.. இத்தனை வருடத்தில் முதல் முறையாக மனம் திறந்த சமந்தா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எனக்கும் அம்மா ஆகணும்னு ஆசை இருக்கு.. இத்தனை வருடத்தில் முதல் முறையாக மனம் திறந்த சமந்தா!

எனக்கும் அம்மா ஆகணும்னு ஆசை இருக்கு.. இத்தனை வருடத்தில் முதல் முறையாக மனம் திறந்த சமந்தா!

Malavica Natarajan HT Tamil
Nov 12, 2024 06:48 AM IST

நடிகை சமந்தா தனக்கு இப்போதும் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. அதற்கு இன்னும் தாமதம் ஆகிவிடவில்லை எனக் கூறியுள்ளார்.

எனக்கும் அம்மா ஆகணும்னு ஆசை இருக்கு.. இத்தனை வருடத்தில் முதல் முறையாக மனம் திறந்த சமந்தா!
எனக்கும் அம்மா ஆகணும்னு ஆசை இருக்கு.. இத்தனை வருடத்தில் முதல் முறையாக மனம் திறந்த சமந்தா!

எனக்கு தாயாக ஆசை உள்ளது

சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் குறித்த டைம்ஸ் நவ் பத்திரிகையின் உரையாடலில் இவ்வாறு சமந்தா பேசியுள்ளார். இந்த உரையாடலின் போது, வெப் தொடரில் காஷ்மி என்ற சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது? நிஜ வாழ்க்கையில் தாயாக இருப்பதை இழப்பது போல் தோன்றுகிறதா எனத் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமந்தா, “நான் தாய்மை அடைவது மிகவும் தாமதமாகவிட்டது என நான் நினைக்கவில்லை. எனக்கு இன்னும் ஒரு தாயாக வேண்டும் என்ற கனவுகள் உள்ளன.

வயது ஒரு தடை அல்ல

நிச்சயமாக நான் எப்போதும் ஒரு தாயாக இருக்க விரும்புகிறேன். அது ஒரு அழகான அனுபவம். நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் பெரும்பாலும் என் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் தாயாக இருக்க முடியாத நேரம் என வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்." என சமந்தா கூறியுள்ளார்.

திருமண முறிவு

இவரது பேச்சைக் கேட்ட பலருக்கும் சமந்தாவின் ஆசையைக் கேட்டு அவர் மேல் பரிதாபம் ஏற்பட்டது. காரணம், சமந்தா நடிகர் நாக சைதன்யாவை 7 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து விட்டனர். அந்த சமயத்தில் இருந்து சமந்தா பல துயர்களை சமந்தித்த போதும் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

நாக சைதன்யா- சோபிதா திருமணம்

அதே சமயத்தில், அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்கள் இருவருக்கும் நிச்சயசதார்த்தம் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்ய உள்ளனர்.

சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்ததற்கு, சமந்தா குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. அவருக்கு குழந்தை பெற்றுக் கொண்டு குடும்ப பெண்ணாக இருக்க எந்த விருப்பமும் இல்லை என பல தரப்பிலிருந்து வதந்திகள் பரவியது. ஆனால், குடும்பம் குறித்தான சமந்தாவின் சமீபத்திய பேட்டிகள், அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளன.

கம் பேக் கொடுத்த சமந்தா

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இதையடுத்து அவரது கம்பேக் ஆக தற்போது வெளியாகியிருக்கும் சிட்டாடல் வெப் சீரிஸ் அமைந்துள்ளது.

தனது படங்களில் அற்புதமான நடிப்பு, க்யூட் தோற்றத்தால் ரசிகர்களை கவரும் சமந்தா கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வந்துள்ளார். அந்த வகையில், சமந்தாவின் பாலிவுட் என்ட்ரியாக தற்போது வெளியாகியிருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸில் ஆக்‌ஷன் ராணியாக அவதாரம் எடுத்திருப்பதோடு, கவர்ச்சி மற்றும் நெருக்கமான காட்சிகளிலும் எந்த குறையும் இல்லாமல் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார்.

ஆக்ஷன் மட்டுமல்ல ரொமான்ஸும் படு ஜோர்

வருண் தவானுடன் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் துப்பாகியால் எதிரிகளால் சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டி மிரட்டிய சமந்தா, தனது கணவனாக தோன்றும் வருண் தவானுடன் இணைந்து ரொமான்ஸிலும் படுஜோராக கலக்கியுள்ளார்.

வைரலாகும் லிப்லாக் விடியோ

சினிமாக்களில் ஹீரோ, ஹீரோயின் இடையிலான ரெமான்ஸ், நெருக்கமான காட்சிகளும், லிப் லாக், படுக்கையறை காட்சிகளும் சென்சார் கருதி சில வரம்புகளுக்குள் படமாக்கப்பட்டும். ஆனால், சென்சார் வளையத்துக்குள் வராத ஓடிடி தளங்களில் வெளியாகும் ஒரிஜனல் வெப்சீரிஸ்களில் நெருக்கமான காட்சி, லிப் லாக், படுக்கையறை காட்சிகள் கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியுடனே படமாக்கப்படுகிறது.

இதுபோன்ற காட்சிகளில் சினிமாக்களில் நடிக்கும் டாப் நடிகைகளும் தாராளம் காட்டுவதோடு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், குஷியையயும் தருகிறார்கள்.

அந்த வகையில் சினிமாக்களில் கண் இமைக்கும் நொடி பொழுதில் வரும் லிப் லாக் காட்சிகள், வெப்சீரிஸ்களில் உண்ர்ச்சி பெருக்கில் முத்தத்தை பரிமாறிகொள்ளும் விதமாகவும், சில நிமிடங்கள் வரை நீடிக்கும் விதமாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. அப்படியான காட்சியில், வருண் தவான் - சமந்தா ஆகியோர் லிப்லாக் பரிமாறிகொள்ளும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.