"நான் யாருன்னு ஒரு ஆம்பள தான் சொல்லனுமா? இனி இந்தத் தப்ப பண்ண மாட்டேன்" ஆவேசமான சமந்தா!
திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்களின் கதாப்பாத்திரத்தை தற்போது வரை ஆண்கள் தான் முடிவு செய்கின்றனர் என சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா ஒரு நடிகையாக சமுதாயத்தின் மீது தனக்கு ஒரு பொறுப்பு இருப்பதை உணர்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் சமூகத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சரியானதாக இருக்க வேம்டும். அதற்காக இனி தான் நடிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார். இப்போது வரை திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்களின் கதாப்பாத்திரத்தை ஆண்கள் தான் முடிவு செய்கின்றனர். அது மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகராக கடமை உள்ளது
முன்னதாக நேற்று மும்பையில் பிசினஸ் டுடேயின் மோஸ்ட் பவர்ஃபுல் வுமன் இன் பிசினஸ் 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா ஒரு நடிகராக சமூகத்திற்கு தான் செய்ய காத்திருக்கும் கடமைகள் குறித்து பேசியுள்ளார்.
அப்போது, மக்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். அது நிச்சயம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். நான் நடிக்கும் அனைத்து விளம்பரங்களின் பிராண்டுகளை பலரும் நம்பிக்கையோடு வாங்குகின்றனர். இந்த பிராண்டுகல் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் தான் நான் யார் என்பதை எடுத்துக் கூறும். இது விளம்பரங்களில் மட்டும் அல்ல, நான் நடிக்கும் திரைப்படங்களிலும் அது எதிரொலிக்கும்.
ஆண்கள் தான் அனைத்தையும் முடிவு செய்கின்றனர்
சினிமாவில் தற்போது வரை பெண்களின் கதாப்பாத்திரங்களை ஆண்கள் தான் முடிவு செய்து வருகின்றனர். அவர்கள் நடிகராகவோ அல்லது இயக்குநர், தயாரிப்பாளர்களாகவோ இருக்கின்றனர். இவர்கள் தான் அந்தப் படத்தில் நடிக்கும் பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றனர். இதன் மூலமே பெண்கள் இந்த உலகத்திற்கு யார் என்று தெரியவருகின்றனர். இது நிச்சமயம் பெண்களின் பயணமாக இருக்காது. இது அவர்களின் பலவீனமாகவே கருதப்படும்.
இனி, சினிமாவிலும், விளம்பரங்களிலும் தனது கதாப்பாத்திரம் என்ன அதை எப்படி மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பதையும், நான் எந்த பிராண்டுகளில் நடிக்க வேண்டும் என்பதையும் இனி நானே முடிவு செய்யப் போகிறேன். அதற்கான சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளேன் எனக் கூறினார்.
சிட்டாடல் ஹனி பன்னி
சமீபத்தில் சமந்தா நடித்த சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர், ஆண்களுக்கு நிகரான வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளது. ஒரு கதாநாயகன் என்ன செய்வானோ அதையே கதாநாயகியும் செய்யலாம் என்பதை இந்த வெப் தொடர் நிரூபித்துள்ளது. அதனால், இதற்கு மேல், பெண்களை மென்மையாக காட்டும் கதாப்பாத்திரங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்.
இது போன்ற கதாப்பாத்திரங்கள் என்னை விட்டு வெகுதூரம் விலகி இருக்கலாம். அல்லது, இந்த முடிவு எனக்கு குறைவான வாய்ப்புகளை சினிமாவில் வழங்குவதற்கும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சமந்தா சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் வருண் தவானுடன் நடித்திருப்பார். பிரபலமான தி ஃபேமிலி மேன், பார்ஸி வெப் தொடர்களை எடுத்த ராஜ் மற்றும் டிகே இந்த தொடரை இயக்கியுள்ளனர்.
ஹீரோக்கு நிகரான ஹீரோயின்
சிட்டாடல் ஹனி பன்னி தொடரில் வருண் தவானுக்கு இணையாக சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டி நடித்தது மக்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சமந்தா, வருண் தவானுடன் இணைந்து நடித்த லிப் லாக் காட்சி நெட்டிசன்களால் பெரும் பேசுபொருளாக உள்ள நிலையில் சமந்தா தற்போது தனது கதாப்பாத்திரத்தை எப்படி மேம்படுத்துவது குறித்து பேசியுள்ளார்.
டாபிக்ஸ்