Samantha: திருமண ஏற்பாடு... மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா குடும்பம்... முடிந்தது டும் டும் டும்-actress samantha brother wedding photos goes viral - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: திருமண ஏற்பாடு... மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா குடும்பம்... முடிந்தது டும் டும் டும்

Samantha: திருமண ஏற்பாடு... மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா குடும்பம்... முடிந்தது டும் டும் டும்

Malavica Natarajan HT Tamil
Sep 22, 2024 10:51 AM IST

Samantha: நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்த நிலையில், தற்போது சமந்தாவின் குடும்பத்தில் அடுத்த திருமணம் நடந்துள்ளது. இதனால் சமந்தா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

Samantha: திருமண ஏற்பாடு... மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா குடும்பம்... முடிந்தது டும் டும் டும்
Samantha: திருமண ஏற்பாடு... மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா குடும்பம்... முடிந்தது டும் டும் டும்

இந்நிலையில், சமந்தா வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

சமந்தா வீட்டில் டும் டும் டும்

இதுகுறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், சமந்தாவின் சகோதரரான டேவிட்டின் திருமணம் ஜெனிவாவில் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

சமந்தாவின் பரிசு

விஸ்கான்சின் ஜெனிவா ஏரியில் நடைபற்ற இந்த திருமணத்தில் சமந்தா தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக பங்கேற்றுள்ளார். மேலும், சகோதரனின் திருமணத்திற்கு சமந்தா விலை உயர்ந்த பரிசுகள் ஏதேனும் வழங்கியிருப்பார் என பலரும் எதிர் பார்த்த நிலையில், அவர் தனது சகோதரனின் திருமணத்திற்கு பூங்கொத்தை பரிசாக வழங்கியுள்ளார். சமந்தாவின் இந்தப் பரிசால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், சமந்தா ஜெனிவா ஏரிக்கரையில் நடந்த தனது சகோதரர் டேவிட்- நிக்கோல் தம்பதியின் திருமணப் புகைப்படம் மற்றும் தனது குடும்பத்துடன் சந்தோஷமாய் நேரத்தை செலவழித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்தப் பதிவில் அவர் இதய வடிவ எமோஜியுடன் குடும்பம் என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

சமந்தா ஹாப்பி அண்ணாச்சி

சமந்தாவுடன் ஏற்பட்ட திருமண முறிவுக்குப் பின் தற்போது நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் தமிழ் மொழியில் நடிகையாக அறிமுகமான சோபிதாவை காதலித்து வந்தார். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் நாக சைத்தன்யா- சோபிதா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதுமட்டுமின்ரி, சமந்தா சைத்தன்யாவை விட்டு போன போது மிகுந்த துயரில் இருந்தோம். அதிலிருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. ஆனால், தற்போது சைத்தன்யா அவரது மகிழ்ச்சி எங்கு உள்ளது என்பதை கண்டுபிடித்து விட்டார். இதனால், எங்கள் குடும்பம் மீண்டும் மகிழ்ச்சி அடைந்துள்ளது என நாக சைத்தன்யாவின் தந்தையம் நடிகருமான நாகார்ஜூனா தெரிவித்திருந்தார். இதையடுத்து சமந்தாவின் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வந்த நிலையில், தற்போது சமந்தா குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றனர்.

வெப் சீரிஸ்

மேலும், இவர் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சமந்தாவுடன் வருண் தவான் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், தற்போது மீண்டும் மற்றொரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தன் கவலைகளை மறந்து தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வருவதைக் கண்டு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.