வேலைக்காக உடம்ப விக்கணுமா? பாலிவுட் நடிகை ஆகணும்னா இதெல்லாம் ரொம்ப முக்கியம்- ட்ரெண்டிங் நடிகை பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேலைக்காக உடம்ப விக்கணுமா? பாலிவுட் நடிகை ஆகணும்னா இதெல்லாம் ரொம்ப முக்கியம்- ட்ரெண்டிங் நடிகை பேச்சு

வேலைக்காக உடம்ப விக்கணுமா? பாலிவுட் நடிகை ஆகணும்னா இதெல்லாம் ரொம்ப முக்கியம்- ட்ரெண்டிங் நடிகை பேச்சு

Malavica Natarajan HT Tamil
Nov 06, 2024 12:18 PM IST

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக என் உடலை விற்றுக் கொள்ள நினைக்கும் ஆள் நான் இல்லை என நடிகை ரெஜினா காசன்ட்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

வேலைக்காக உடம்ப விக்கணுமா? பாலிவுட் நடிகை ஆகணும்னா இதெல்லாம் ரொம்ப முக்கியம்- ட்ரெண்டிங் நடிகை பேச்சு
வேலைக்காக உடம்ப விக்கணுமா? பாலிவுட் நடிகை ஆகணும்னா இதெல்லாம் ரொம்ப முக்கியம்- ட்ரெண்டிங் நடிகை பேச்சு

பாலிவுட் நடிகையான ரெஜினா

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஸ்கிரீன் எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் பாலிவுட்டில் நடிக்க வந்தது குறித்தும், அங்கு கதாநாயகிகளை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். அப்படி மொழி தெரியாத நடிகர்களையோ, நடிகைகளையோ அவர்கள் நடிக்க வைக்க விரும்புவதில்லை. ஆனால், தென்னிந்திய மொழி படங்களில் அப்படி இல்லை. மொழி தெரிந்தாலும் தெரியா விட்டாலும் அவர்கள் படங்களில் நடிக்கலாம். நடித்தவர்களுக்கு பதிலாக வேறு யாராவது டப் செய்து கொள்வர்.

ஹிந்தி கட்டாயம்

ஆனால், ஹிந்தி படங்களில் பெரும்பாலும் நேரடியாக வசனங்களை பதிவு செய்கின்றனர். இதனால், அங்குள்ள நடிகர்களுக்கு நிச்சயம் மொழி அறிவு அவசியமாகிறது. நல்ல வேளையாக எனது அம்மா சிறு வயது முதலே என்னை ஹிந்தி படிக்குமாறு கட்டாயப்படுத்தினார். பள்ளியிலேயே எனது 2ம் மொழியாக ஹிந்தியைத் தேர்வு செய்யுமாறு கூறினார். அதுமட்டுமின்றி, வாய்ப்பு கிடைத்தால் பிரெஞ்சு மொழி கற்றுக் கொள்ளுமாறும் என்னைக் கூறினார். அவர் என் எதிர்காலத்தை நினைத்து எடுத்த இந்த முடிவால் தான் நான் சினிமாவில் தற்போது நிலைத்து நிற்பதாக கூறினார்.

பெண்கள் முன்னேற்றம் எனக்கும் ஓகே தான் ஆனா..

இங்கு பல திரைப்படங்கள் பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசுகிறது. பல பெண்கள் தங்கள் தடைகளைத் தாண்டி வெளி உலகத்திற்கு வந்துள்ளனர். அதை படமாக எடுத்தாலும் எத்தனை பேர் அதைப் பார்ப்பார்கள் என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி எனக்கும் பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பான படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது தான். ஆனால், அந்த சமயத்தில் என்னை திரைப்படங்களில் ஐட்டம் பாட்டிற்கு நடனமாட அழைத்தால் அதையும் நான் செய்வேன். நான் ஐட்டம் பாட்டிற்கு நடனமாடுவதால், மார்க்கெட் இழந்த நடிகைகளில் ஒருவராகவோ, என்னை காட்சிப் பொருளாக மற்றவர்கள் பார்க்க அனுமதிப்பதில்லை. என் சினிமா வாய்ப்புகளுக்காக நான் உடலை விற்று கொள்ள நினைக்கும் ஆள் நான் இல்லை.

நடிகைகளின் மார்க்கெட்

சினிமாவில் பெண் நடிகைகளின் மார்க்கெட் என்பது, நாங்கள் எந்தக் கதாநாயகர்களுடன் நடிக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் முடிவு செய்யப்படுகிறது. நான் வாய்ப்பிற்காக எப்போதும் லைம் லைட்டிலேயே இருக்க நினைபர்பதில்லை. நானும் ஒரு மனுஷி தான், நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் சில கருத்துகள் இருக்கும். அதனால், என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பொது வெளிக்கு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை எனக் கராறாக பேசியுள்ளார்.

தமிழ் மக்களிடம் பிரபலமான ரெஜினா

தமிழில் பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதலே படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருப்பார் ரெஜினா. பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்க வந்த அவர், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்த ரெஜினா தற்போது ஜாட் மற்றும் செக்சன் 108 என்ற ஹிந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.