சூர்யாவின் பாலிவுட் பட அப்டேட்.. தமிழ் பட ரீமேக்கில் ஜான்வி கபூர்.. வருத்தத்தில் நடிகர் கவின் - டாப் 10 சினிமா நியூஸ்
Top 10 Cinema News: சூர்யா நடிக்கும் இந்தி படம் குறித்த அப்டேட், அமரன் வசூல் நிலவரம், வருத்தத்தில் இருக்கும் நடிகவர் கவன் உள்பட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

சூர்யாவின் பாலிவுட் பட அப்டேட்
சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறீர்களா? என நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, "நான் நாயகனாக நடிக்கவுள்ள பாலிவுட் படத்தின் பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்றன. அதுதான் என் முதல் ஹிந்தி படமாக இருக்கலாம். அது என்ன படமென இங்கு தெரிவிக்க சரியான தருணம் அல்ல. தயாரிப்பு தரப்பில் இருந்து வருவதே சரியாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
'ராயன் Rumble'
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'ராயன்' படத்தில் இடம்பெற்ற 'ராயன் Rumble' வீடியோ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது
அமரனை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா
'அமரன்' திரைப்படத்தை பார்த்த நடிகர் எஸ்.ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.