விஷாலுடன் கிசுகிசு.. குகைக்காட்சியில் கார்த்தியுடன் நெருக்கம்..திரிஷா சாயல்.. நடிகை ரீமா சென்னின் கதை!
விஷாலுடன் கிசுகிசு.. குகைக்காட்சியில் கார்த்தியுடன் நெருக்கம்.. திரிஷா சாயல்.. நடிகை ரீமா சென்னின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று காண்போம்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்த கதாநாயகிகளில் ஒரு சிலரே நல்ல ஃபெர்மாரகவும் இருந்தனர். அந்த வகையில் ஒரு முக்கியமான நடிகை ரீமா சென். அவர் இன்று தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
யார் இந்த நடிகை ரீமா சென்?: ரீமா சென் அக்டோபர் 29 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் தனது பள்ளிப்படிப்பை, கொல்கத்தா நகரில் கிடர்பூர் என்னும் பகுதியிலுள்ள புனித தாமஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பின், இவர்களது குடும்பத்தினர் மும்பைக்குப் புலம் பெயர்ந்தனர். அதனால், வங்க மற்றும் இந்தி மொழிகளில் நன்கு பேசும் திறமையைப் பெற்றார்.
மும்பையில் இருந்தபோது ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்த ரீமா சென், பின் ’சித்ரம்’ என்னும் தெலுங்கு சினிமா மூலம் 2000ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் 2001ஆம் ஆண்டு, இவர் கெளதம் மேனனின் முதல் படமான ’மின்னலே’ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
ரீமா சென்னும் திரிஷாவுக்கும் இடையில் இருந்த ஒரே முகச்சாயல்:
இப்பாடலில் அனைத்துப் பாடல்களும் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பான நிலையில், இவரது பெயர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. ஆனால், இவரது முகச்சாயலும் நடிகை திரிஷாவின் சாயலும் ஒரே மாதிரியாக இருக்க, ஆரம்பத்தில் குழம்பிய ரசிகர்கள், ரீமா வேறு, திரிஷா வேறு என்பதை உணர்ந்து கொண்டனர். பின், அதே ஆண்டு இவர் முதன்முதலாக இந்தியில் நடித்து வெளியான ’ஹும் ஹோ கய ஆப்கி’ என்னும் படம் ப்ளாப் ஆனது.
ஆனால், தமிழில் இவர் நடித்த ’மின்னலே’ படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என ஃபிலிம் பேர் விருதை தட்டிச்சென்றார். பின் 2002ஆம் ஆண்டு இவர் ’தூள்’ படத்தில் சொப்னாவாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் ரீமா சென், நடிகர் விக்ரமை காதலிக்க முயற்சிக்க, ரீமா தன்னைக் காதலிக்கசெய்ய விவேக் செய்யும் காமெடி களேபரங்கள் இன்றும் படுபிரபலம்.
அதேபோல், 2002ஆம் ஆண்டு வெளிவந்த ’பகவதி’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வலம் வந்திருப்பார். பின், 2003ஆம் ஆண்டு மாதவன் நடித்த ’ஜே ஜே’ திரைப்படத்தில், ’மே மாசம் 98ல் மேஜர் ஆனேனா’ என்னும் பாடலில் வந்து ஆடி கலக்கியிருப்பார், ரீமா. பின் ’எனக்கு 20 உனக்கு 18ல்’ சிறப்புத்தோற்றத்தில் தோன்றிய ரீமா,’செல்லமே’ படத்தின் மூலம் மறு அவதாரம் எடுத்தார்.
விஷாலுடன் கிசுகிசு.. குகைக்காட்சியில் கார்த்தியுடன் நெருக்கம்:
2004ஆம் ஆண்டு வெளியான இப்படம் நடிகர் விஷாலின் அறிமுகப் படமாகும். பின் இந்த ஜோடி, திமிரு படத்தில் மீண்டும் இணைந்தது. அதனால் நடிகர் விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின் 2006ஆம் ஆண்டு வல்லவன் படத்தில் கீதா என்னும் வில்லத்தனம் நிறைந்த நாயகியாக தோன்றி, இன்றும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்துள்ளார், ரீமா சென்.
பின் ரெண்டு திரைப்படத்தில் மீண்டும் மாதவனுடன் ஜோடி சேர்ந்தார், ரீமா. இவர் நடித்த கதாப்பாத்திரங்களிலேயே படுவித்தியாசமான கதாப்பாத்திரம் என்றால், இயக்குநர் செல்வராகவன் படத்தில் அனிதா பாண்டியனாக நடித்து, ஒட்டுமொத்த சோழர்களையும் வஞ்சத்தால் கவிழ்க்கும் முக்கிய ரோலில் நடித்து மிரட்டியிருப்பார். ஒரு குகைக்காட்சியில் நடிகர் கார்த்தியை கட்டியணைக்கும் காட்சி மூலம் அன்றைய இளசுகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். பின், 2011ஆம் ஆண்டு ராஜபாட்டை படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தார். அதன்பின், சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்தார். அதன்பின், ரீமா நடிக்கவில்லை. சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, சிவ் கரண் சிங் என்னும் நபரை 2012ஆம் திருமணம் செய்துகொண்டார்,ரீமா. இந்த அழகிய தம்பதியினருக்கு ருத்வீர் என்னும் மகன் உள்ளார்.
தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு படமுமே ரீமாவின் பெயர் மங்காத நச் கதாப்பாத்திரங்களாக, ரீமா சென்னுக்கு அமைந்துவிட்டன. அவர் இன்று தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.
டாபிக்ஸ்