நடிகை ரம்பா விவாகரத்து செய்ய போகிறாரா? காட்டு தீயாய் பரவும் செய்தி.. ஏன் இப்படி.. முற்றுப்புள்ளி வைத்த ரம்பா!
Actress Rambha : பிரபல நடிகை ரம்பா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் மிகப்பெரிய பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து ரம்பா சொல்வது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1993ல் பிரபு நடித்த உழவன் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியான நடிகையாக மாறினார் ரம்பா. தமிழில் தொடை அழகி என்றெல்லாம் அடைமொழியோடு அழைக்கப்பட்ட ரம்பா, முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90களில் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
சுந்தர புருஷன், சிவசக்தி,அடிமைச் சங்கிலி, செங்கோட்டை, அருணாச்சலம், காதலர் தினம்,நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, காதலா காதலா, மின்சாரக் கண்ணா,பந்தா பரமசிவன், குங்குமப்பொட்டுக்கவுண்டர், என்றென்றும் காதல், சுயம்வரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
விஜயலட்சுமி என்கிற ரம்பா
ரம்பாவின் முதல் பெயர் விஜயலட்சுமி. இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். ரம்பா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நாடகத்தில் நடித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஹரிஹரன் அவிரா, ரம்பாவின் நடிப்பை விரும்பி அவருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 'சர்கம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. படம் வெளியானதும் விஜயலட்சுமியின் பெயர் ரம்பா என மாற்றப்பட்டது. ரம்பா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.