பெட் ரூமில் குட்டி டவுசருடன்.. நடிகை வெளியிட்ட வீடியோ.. வைரலாகும் நியூஸ்..
பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களின் உத்தேச பட்டியலில் இடம் பிடித்துள்ள நடிகை பூனம் பாஜ்வா, படுக்கை அறையில் இருந்து வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி, களேபரம் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் செல்லும் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இந்த மாதம் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான புரோமோவும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள்?
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போவது யார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, ராப் பாடல்கள் மூலம் பிரபலமாகி வந்த பால் டப்பா, அதிவேகமாக வாகனம் ஓட்டி பிரபலமடைந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், ஆறு படத்தில் சவுண்டு சரோஜாவாக வந்த நடிகை ஐஸ்வர்யா, விஜே நண்டு ஜெகன், பாக்கியலட்சுமி சீரியலில் பழனிசாமியாக புகழ்பெற்ற நடிகர் ரஞ்சித், குக் வித் கோமாளியில் புகழ்பெற்ற குரேஷி மற்றும் ஜோயா, சேவல் உள்ளிட்ட படங்களில் நடித்த பூனம் பாஜ்வா போன்றோரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இந்த அறிவிப்பால், உத்தேச பட்டியலில் இருப்பவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளை பிக்பாஸ் விரும்பிகள் கவனித்த வண்ணம் இருக்கின்றனர்.