Bigg Boss Tamil 8: “இந்த படை போதுமா?”களம் 8 -ல் பந்தயம் அடிக்கப்போவது யார்? - பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் இங்கே!
Bigg Boss Tamil 8: பிக்பாஸ் சீசன் 8 -ல் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன

Bigg Boss Tamil 8: “இந்த படை போதுமா?”
களம் 8 -ல் பந்தயம் அடிக்கப்போவது யார்? - பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் இங்கே!
Bigg Boss Tamil 8: சின்னத்திரையில் மிக ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், பட வேலைகள் இருப்பதாக ஒதுங்கிக்கொள்ள, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியை களமிறக்கி இருக்கிறது விஜய் டிவி
சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி, களேபரம் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் செல்லும் இந்த சீசன் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான புரோமோவும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
