Bigg Boss 8: ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா இருக்கே.. பிக் பாஸ் செட் அமைக்கும் பணியில் விபத்து!
Bigg Boss 8: பிக் பாஸ் செட் அமைக்கும் பணி என்பது உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 20 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உள்ளார்.
Bigg Boss 8: உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி, களேபரம் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் செல்லும் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
அக்டோபர் 6 ஆம் தேதி முதல் பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க இருப்பதாக நேற்று ( செப் 24 ) அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் செட்
இதனிடையே பிக் பாஸ் எட்டாவது சீசன் வரும் ஆறாம் தேதி தொடங்க இருக்க நிலையில், செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இந்த முறையும் வழக்கம்போல் சென்னை Evp ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் செட் போடப்பட்டு வருகிறது.
வடமாநில தொழிலாளி படுகாயம்
இந்நிலையில் பிக் பாஸ் செட் அமைக்கும் பணி என்பது உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஷாக்கின் கான் என்பவர் 20 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உள்ளார். இந்த விபத்தில் அவருக்கு கை இடுப்பு மற்றும் எலும்பு உடைந்து படுகாயம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. சிகிச்சைக்காக காயமடைந்த வடமாநில தொழிலாளி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் பிக் பாஸ் செட் படப்பிடிப்பு தளத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
இதைப் பார்த்து நெட்டிசன்கள் பிக் பாஸ் எட்டாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே, ஆரம்பத்து விட்டதா பிரச்னை என பேச்சு வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் ஒருவர், ” எல்லா பிக் பாஸ் சீசன்லயும் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தா சண்டை சச்சரவு இருக்கும், ஆனால் இந்த பிக் பாஸ் சீசன் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அமர்க்களமா…விளங்கிடும் போல “ என கமெண்ட் செய்து உள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருந்தது.
யாரும் எதிர்பார்க்காத விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு எனக் கூறி வில்லத்தனமாக சிரிக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதனால், இவர் நிகழ்ச்சியை எப்படி கையாளப் போகிறார் என்பதைக் காண மக்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி, குரூப்பிசம், டாமினேட் செய்பவர்களை ஓட விட வேண்டும். காய்கறிகளில் நல்லது எது கெட்டது எது என பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனால் மனிதர்களை பார்த்தவுடன் தெரிந்துகொள்ள முடியாது. கேமை தவறாக விளையாடினால் அவர்களுக்கு எந்த கார்டு கொடுக்க வேண்டும் என தெரிய வேண்டும். வார நாட்களில் சண்டையிடுபவர்கள், வார இறுதி நாட்களில் நல்லவர்கள் போல் தங்களை காட்டிக் கொள்வார்கள் என அட்வைஸ்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது
டாபிக்ஸ்