அந்தரங்க வீடியோ லீக்.. இன்ஸ்டாவை தெரிக்க விடும் ஓவியா.. இது ஓவியாவின் வாழ்க்கைத் தத்துவம்!
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ஓவியா வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை கூறியுள்ளார்.
தமிழ், மலையாள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவரின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இந்திய அளவில் இவர் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வாழ்க்கைத் தத்துவம்
அந்தப் பதிவில் வாழ்க்கையில் நினைத்த இடத்தில் நீங்கள் இல்லையென்றாலும், தற்போது நீங்கள் உள்ள இடத்தை மனதார பாராட்டுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுவமும் அதன் நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றத்தான் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓவியாவின் மனப் பக்குவம்
வாழ்க்கையின் எவ்வளவு பெரிய விஷயத்திற்கும் கோபப்படாமல், அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காமல், எல்லாம் நன்மைக்கே எனும் கேரக்டரில் இருப்பவர்கள் எல்லாம் மிகவும் அரிது. அப்படிப்பட்ட கேரக்டரை கொண்டிருப்பதால் தான் ஓவியா மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம்பிடித்தார்.
தமிழில் வெளியான பிக்பாஸ் முதல் சீசனில் இவரது குணத்தை பாராட்டி, இவருக்கு பெரும் ரசிகர் படையே உருவானது. அந்த குணத்தை வாழ்வில் இக்கட்டான தருணங்களிலும் கடைபிடித்து வருகிறார் ஓவியா.
சில நாட்களுக்கு முன் இவரது அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான நிலையில், அதுகுறித்த மக்களின் கேள்விக்கு மிகவும் அசால்டாக பதிலளித்திருப்பார். வீடியோ குறித்த எந்த நெகட்டிவ் கேள்விகளுக்கும் தனக்கே உரித்தான முறையில் பதிலளித்து மக்களை திகைக்க வைத்திருப்பார்.
அந்தரங்க வீடியோ தொடர்பான சமூகத்தின் கேள்விகளை இதுவரை எந்த நடிகைகளும் ஓவியா அளவிற்கு பக்குவமாக எதிர்கொண்டதே கிடையாது. இந்த சம்பவம் குறித்து நடிகை ஓவியா திரச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தாலும் அதன் உண்மைத் தன்மை என்ன என்பது இப்போதுவரை தெரியவில்லை.
கூடா நப்பு
நடிகை ஓவியா தாரிக் என்ற நபருடன் நட்பில் இருந்ததாகவும், பின் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரிடமிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தாரிக் மார்பிங் செய்த வீடியோ ஒன்றை நடிகை ஓவியாவுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், தாரிக்கிடம் பல பெண்களின் வீடியோக்களும், மார்பிங் புகைப்படங்களும் உள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
களவாணி ஓவியா
தமிழ் சினிமாவில் நடிகர் விமலின் ஜோடியாக களவாணி டத்தில் நடித்து, தனது அப்பாவித்தனமான முகத்தால் மக்கள் மனதில் அமர்ந்தவர் ஓவியா. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.
பின்னர், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் படியான படங்கள் அமையாததால், கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.பின், நடிகர் கதிருக்கு ஜோடியாக மதயானைக் கூட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். தொடர்ந்து அவர், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பிக்பாஸ் நட்சத்திரம்
இதற்கு இடையில் தான், விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் ஓவியா. அங்கு அவர் பேசிய விஷயங்களும், அவரின் நடவடிக்கைகளும், அவரின் என்ணங்களும் மக்களுக்கு பிடித்துப்போக இவர் மீண்டும், மக்கள் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவருக்காக ஆர்மியும் உருவாக்கப்பட்டது.
லெஃப்ட் ஹேண்டில் டீலிங்
வழக்கமாக ஒருவரின் அந்தரங்க புகைப்படமோ, வீடியோவை சோசியல் மீடியாவில் வெளிவந்தால், முதலில் அதை மறுக்கத்தான் செய்வார்கள். அதன் பின்னரே, அந்த வீடியோ குறித்தும், அது எப்படி வெளியானது என்பது குறித்தும் விளக்கமளிப்பர். ஆனால், நடிகை ஓவியா அனைவரிலிருந்தும் வேறுபட்டு பதிலளித்துள்ளார்.
கூலாக ஹேண்டில் செய்த ஓவியா
ஓவியாவின் போட்டோவிற்கு கமெண்ட் செய்த நபர் ஒருவர், ஓவியாவின் 17 வினாடி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டிருப்பார். இதைக் கண்ட ஓவியா, அவரிடம் என்ஜாய் என பதில் அளித்து, மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பின், வேறொருவர் வெளியான வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நேரம் உள்ள வீடியோ கிடைக்குமா என கேள்வி எழுப்பி இருந்தார். அதைக் கண்டு கோபமடைந்து ஓவியா பதிலளிப்பார் என எதிர்பார்த்தால், அடுத்த முறை ப்ரோ என கூலாக பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், தான் இவர், வாழ்க்கையின் தத்துவம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில் வாழ்க்கையில் நினைத்த இடத்தில் நீங்கள் இல்லையென்றாலும், தற்போது நீங்கள் உள்ள இடத்தை மனதார பாராட்டுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுவமும் அதன் நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றத்தான் செய்யும் எனக் குறிப்பிட்டு, மக்களுக்கு தன் நிலையை விளக்கியுள்ளார்.
டாபிக்ஸ்