Kasthuri: நடிகை அனுராதாவெல்லாம் அப்படி.. கட்டில் அறை காட்சியில் நடித்தால் இப்படி தான் - நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி
Kasthuri: நடிகை அனுராதாவெல்லாம் அப்படி.. கட்டில் அறை காட்சியில் நடித்தால் இப்படி தான் என நடிகை கஸ்தூரி பகீர் பேட்டியளித்துள்ளார்.

Kasthuri: நடிகை அனுராதா குறித்தும் கட்டில் அறை காட்சி குறித்தும் நடிகை கஸ்தூரி பகீர் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘’நடிகையான எங்களுடன் சில பேர் காஃபி குடிக்கலாம்ன்னு கூப்பிடுவாங்க. அப்போது நான் உங்கள் மனைவியையும் கூட்டிட்டு வாங்கன்னு சிரிச்சிட்டே சொல்லிடுவேன். உங்கள் வீட்டுப்பெண்ணிடம் யாராவது இப்படி கேட்டால் எப்படி இருக்கும். எந்தவொரு பெண்ணும் படுக்கிறதுக்காக நடிக்கிறதுக்கு வரவில்லை. இதுக்காகவா காலையில் எழுந்து மேக்கப் போட்டு, கிளீசரின் போட்டு நடிச்சு, இரவுபகல் பாராமல் வெயிலிலும் மழையிலும் நடிக்கிறதுன்னா கிள்ளுக்கீரையா, கவர்ச்சி நடிகை என்றால் அவிழ்த்துப்போட்டு நடிக்கிறதுன்னு நாக்கில் நரம்பில்லாமல் பேசிட்டுப்போயிடுவான்.
ஒரு கவர்ச்சி நடிகையாக இருக்கிறது கண்ணீர் நடிகையாக இருக்கிறதைவிட ரொம்ப ரொம்ப கஷ்டம். அம்மா நடிகையாக இருந்து நீங்கள் பாசமாக இருந்து கூப்பிடுறது ரொம்ப ஈஸி. அதில் நீங்கள் குண்டாக இருக்கலாம். வயதானவர்களாக இருக்கலாம். உருவம் அதில் பிரச்னை கிடையாது.