Anuradha: 11 வருடங்கள் கோமா..உட்கார்ந்த இடத்துலேயே எல்லாம்.. சொத்து எல்லாத்தையும் வித்தும்..’ - அனுராதா!-anuradha latest interview about his husband sathishkumar accident struggles death - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anuradha: 11 வருடங்கள் கோமா..உட்கார்ந்த இடத்துலேயே எல்லாம்.. சொத்து எல்லாத்தையும் வித்தும்..’ - அனுராதா!

Anuradha: 11 வருடங்கள் கோமா..உட்கார்ந்த இடத்துலேயே எல்லாம்.. சொத்து எல்லாத்தையும் வித்தும்..’ - அனுராதா!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 06, 2024 10:38 AM IST

Anuradha: அவர்கள் பேசிக் கொண்டே பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது, ரோட்டில் இருந்த டிவைடரின் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. இந்த விபத்தில் அந்தரத்தில் பறந்த அவருக்கு தலையில் அடிபட்டு, கோமா நிலைக்குச் சென்றார். - அனுராதா!

Anuradha: 11 வருடங்கள் கோமா..உட்கார்ந்த இடத்துலேயே எல்லாம்.. சொத்து எல்லாத்தையும் வித்தும்..’ - அனுராதா!
Anuradha: 11 வருடங்கள் கோமா..உட்கார்ந்த இடத்துலேயே எல்லாம்.. சொத்து எல்லாத்தையும் வித்தும்..’ - அனுராதா!

இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடைய கணவர் வேலை இல்லை என்றால் டான்ஸ் யூனியன் சென்று, அங்கு கேரம் போர்டு விளையாடிவிட்டு, நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு வருவார். அதேபோலத்தான் அன்றைக்கும் விளையாடிவிட்டு, என்னிடம் வீட்டில் என்ன சமையல் என்று கேட்டார். நான் வீட்டில் வஞ்ஜரம் மீன் வறுத்து வைத்திருக்கிறேன், வாருங்கள் என்று கூறினேன். அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் தீபாவளி வரை இருந்தது.

இந்த நிலையில், அங்கிருந்த பையன் ஒருவன், தீபாவளிக்கு ஆடை வாங்க காசு இல்லை என்று கூற, அந்த பையனை அழைத்துக் கொண்டு அவர் ஆடை வாங்கச் சென்றார். அவர்கள் பேசிக் கொண்டே பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது, ரோட்டில் இருந்த டிவைடரின் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. இந்த விபத்தில் அந்தரத்தில் பறந்த அவருக்கு தலையில் அடிபட்டு, கோமா நிலைக்குச் சென்றார்.

 

அனுராதா
அனுராதா

இதையடுத்து அங்கு இருந்த அவரின் நண்பர் ஒருவர் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். இதனையடுத்து எனக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. நான் அங்கு சென்றேன். அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் இருந்தார். இதையடுத்து அவர்கள் உங்கள் கணவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக என்னிடம் கூறினார்கள். கிட்டத்தட்ட 17 நாட்கள் மருத்துவமனையில் அவர் கோமாவில் தான் இருந்தார். அவருக்கு எல்லா விஷயங்களும் மறந்து போய்விட்டன. மீண்டும் அவருக்கு நினைவுகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காக, அவருக்குப் பிடித்த பாடல்களை ஒலிக்கச்செய்தேன்.

சதீஷ்குமாருடன் மகள்
சதீஷ்குமாருடன் மகள்

ஒரு கட்டத்தில் அவர்கள் இவரை உங்களால் பார்த்துக்கொள்ள முடியாது என்று கூறினார்கள். ஆனால் நான் அவரை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவரது மருத்துவ செலவிற்காக என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்றேன். அவருக்கு நின்ற இடத்திலேயே பாத்ரூம் மோஷன் என அனைத்தும் சென்று விடும். எனக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், கிட்டத்தட்ட 3 வது குழந்தையாக அவர் மாறிவிட்டார். இரண்டு மாதங்களில் என்னுடைய அம்மாவுக்கு மாரடைப்பும் வந்து விட்டது. அடிமேல் அடி வாங்கினேன். ஆனாலும் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளலாம் என்று போராடினேன். கிட்டத்தட்ட 11 வருடங்களாக கணவரை நான் அப்படித்தான் பார்த்துக்கொண்டேன். அதன் பின்னர் ஒரு நாள் சாப்பிடும் போது இறந்து விட்டார்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.