HBD Kanika : எதிர்நீச்சல் சீரியல் புகழ்.. , '5 ஸ்டார்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கனிகா பிறந்தநாள் இன்று!
HBD Kanika : சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது. தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான, 5 ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா.

'5 ஸ்டார்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் நடிகை கனிகா. இவர் மதுரையில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். மதுரையிலிருந்த பிரபலமான பள்ளியொன்றில் படித்த இவர் மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
பின்னர் ராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட இவர், பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
பெயர் சொல்லும் அளவுக்கு கதாபாத்திரம் அமையவில்லை
கனிகா நல்ல வளர்ந்து வரும் நடிகையாக இருந்த போதிலும் அவருக்கு தமிழிழ் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்திலும் பெயர் சொல்லும் அளவுக்கு கதாபாத்திரம் அமையவில்லை.