22 Years of Thenkasi Pattanam: விஜயகாந்த் வெளியேற சரத்குமார் நடித்த தமிழில் சிறந்த ரெமான்டிக் காமெடி படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  22 Years Of Thenkasi Pattanam: விஜயகாந்த் வெளியேற சரத்குமார் நடித்த தமிழில் சிறந்த ரெமான்டிக் காமெடி படம்

22 Years of Thenkasi Pattanam: விஜயகாந்த் வெளியேற சரத்குமார் நடித்த தமிழில் சிறந்த ரெமான்டிக் காமெடி படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 21, 2024 05:21 PM IST

விஜயகாந்த் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் வெளியேறி சரத்குமார் நடித்த படம் ஆக, காமெடி கலந்த காதல் கதையுடன் வெளியாகி ஹிட்டானது தென்காசி பட்டணம். தமிழில் சிறந்த ரெமான்டிக் காமெடி படமாகவும் இருந்து வருகிறது.

விஜயகாந்த் வெளியேற சரத்குமார் நடித்த தமிழில் சிறந்த ரெமான்டிக் காமெடி படம்
விஜயகாந்த் வெளியேற சரத்குமார் நடித்த தமிழில் சிறந்த ரெமான்டிக் காமெடி படம்

மலையாள பதிப்பை இயக்கிய ரஃபி மெக்கார்டின் தமிழ் பதிப்பையுமஇயக்கியிருப்பார். ஹீரோயினாக மலையாளத்தில் நடித்த சம்யுக்தா வர்மா, தமிழிலும் நடித்திருப்பார். இரண்டாவது ஹீரோயினாக தேவையானியும், அஸ்வதி மேனன், இயக்குநர் பி. வாசு, சார்லி, விவேக், வினு சக்கரவர்த்தி, ஸ்ரீவித்யா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

காமெடி கலந்த காதல் கதை

தென்காசியில் மார்க்கெட் உரிமையாளர்களாக நண்பர்களாக இருக்கும் சரத்குமார், நெப்போலியன் இருக்கிறார்கள். நெப்போலியன் தங்கையை விவேக் காதலிக்கிறார். விவேக் மூலம் சம்யுக்தா வர்மா, தேவையான அறிமுகம் சரத்குமார், நெப்போலியனுக்கு கிடைக்கிறது.

சரத்குமாருக்கு சம்யுக்தா மீது காதல் வயப்படுகிறார். இந்த சூழ்நிலையில் நெப்போலியன் சம்யுக்தாவை மீது காதல் வயப்படும் சூழல் உருவாகிறது. இதேபோல் தேவையானிக்கு சரத்குமார் மீது காதல் ஏற்படும் விதமாக திருப்பம் நடக்கிறது.

காதல் ஜோடிகள் மாறியதால் வரும் குழப்பமும், கடைசியில் சரியான காதல் ஜோடிகள் சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை.

திருப்புமுனை தரும் விவேக் கதாபாத்திரம்

படத்தின் தொடக்கம் முதலே காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருப்பார்கள். விவேக் காமெடி வேடத்தில் தோன்றினாலும் படம் முழுக்க ஹீரோவுக்கு இணையாக வந்து போவதுடன், முக்கிய திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். பி. வாசு வில்லத்தனம் மிக்க கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.

காதலால் நட்புக்குள் சிக்கல், பின்னர் புரிதல் என்று சில யூகிக்கும் காட்சிகளால் திரைக்கதை அமைந்திருந்தால் அதை படமாக்கிய விதத்தில் ரசிக்கும்படியாக உருவாக்கியிருப்பார்கள்.

தமிழில் இரண்டாவது படம்

இந்த படத்துக்கு இசையமைத்த சுரேஷ் பீட்டர்ஸ் தமிழில் இசையமைத்த இரண்டாவது படமாகவும், கூலி படத்துக்கு பின்னர் சரத்குமார் நடித்த படத்துக்கு இரண்டாவது முறையும் இசையமைத்தார்.

ஒரிஜினல் மலையாள பதிப்பில் பயன்படுத்திய ட்யூன்களை தமிழிலும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். அழகான இளமான் ஒன்று, கொஞ்சும் தென்காசி, மயிலிறகே போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி பாடல் சூப்பர் ஹிட் மெலடியாக அந்த காலகட்டத்தில் அமைந்தது. இதன் காட்சியமைப்பும் ரசிக்கும் விதமாக இருந்தது.

கமர்ஷியல் ஹிட்

முதலில் இந்த படத்தில் விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. மனோஜ் குமார் இயக்குவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இருவரும் வெளியேறிய நிலையில், சரத்குமார் ஹீரோவாக நடித்தார். காமெடியை முன்னிலை படுத்தி காதல், சென்டிமென்ட் கலந்த படமாக இருந்த தென்காசி பட்டணம் நல்ல வரவேற்பை பெற்ற பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் பெற்றது. தமிழில் சிறந்த ரொமான்டிக் காமெடி படமாக இருக்கும் தென்காசி பட்டணம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.