லிப் லாக் கொடுத்துவிட்டு காரணம் சொல்லிய நடிகை.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
ஸ்வீட்டி நாட்டி கிரேஸி திரைப்படித்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து நடிகை இனியா விளக்கம் அளித்துள்ளார்.

யுத்தம் செய், வாகை சூடவா, மௌன குரு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் நடிகை இனியா. இவர், அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாலும், அந்தப் படங்கள் வெளிவராமலும், எடுக்கப்படாமலும் போனதால், தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட்டை இழந்தார்.இதையடுத்து, தனது பூர்வீகமான கேரளாவிற்கே சென்று நடனப் பள்ளி ஒன்றை தொடங்கினார்.
பின், இவருக்கு உடலில் ஏற்பட்ட பாதிப்புகளால் தொடர்ந்து படத்தில் நடிக்க முடியாமல் போனது, அத்துடன் இவரின் உடல் எடையும் அதிகரித்த வண்ணமாக இருந்தது. இதனால், ஒரு சில படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஸ்வீட்டி நாட்டி கிரேஸி
இந்த நிலையில் தான், இனியா நடிப்பில் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் அறிமுக விழாவில் பேசிய இனியா, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. என் வாழ்க்கையில் தொடர்ந்து இதுபோன்ற நல்ல விஷயங்கள் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். 3 கதாநாயகிகள் உள்ள இந்தப் படத்தில் யார் ஸ்வீட்டி, யார் நாட்டி, யார் கிரேஸி என படம் பார்த்தால் தெரியும். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.