முன்னாள் ஹீரோயின் மகனுடன் டேட்டிங்..பெளத்த மத வாழ்க்கை முறை! ஊடக வெளிச்சம் விரும்பாத நடிகை அக்‌ஷரா ஹாசன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  முன்னாள் ஹீரோயின் மகனுடன் டேட்டிங்..பெளத்த மத வாழ்க்கை முறை! ஊடக வெளிச்சம் விரும்பாத நடிகை அக்‌ஷரா ஹாசன்

முன்னாள் ஹீரோயின் மகனுடன் டேட்டிங்..பெளத்த மத வாழ்க்கை முறை! ஊடக வெளிச்சம் விரும்பாத நடிகை அக்‌ஷரா ஹாசன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 12, 2024 07:00 AM IST

முன்னாள் ஹீரோயின் மகனுடன் டேட்டிங், பெளத்த மத வாழ்க்கை முறை என இருந்து வரும் நடிகை அக்‌ஷரா ஹாசன் ஊடக வெளிச்சம் விரும்பாத நடிகையாக இருக்கிறார். தந்தை கமலை போல் பன்முக திறமை கொண்டவராக திகழும் அக்‌ஷராவின் பிறந்தநாள் இன்று

முன்னாள் ஹீரோயின் மகனுடன் டேட்டிங்..பெளத்த மத வாழ்க்கை முறை! ஊடக வெளிச்சம் விரும்பாத நடிகை அக்‌ஷரா ஹாசன்
முன்னாள் ஹீரோயின் மகனுடன் டேட்டிங்..பெளத்த மத வாழ்க்கை முறை! ஊடக வெளிச்சம் விரும்பாத நடிகை அக்‌ஷரா ஹாசன்

கமல்ஹாசன் - சரிகா தம்பதியனரின் இரண்டாவது மகளான இவர் பிரபலமாக இருந்தாலும் அக்கா ஸ்ருதி போல் இல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விஷயங்களை வெளி உலகம் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாவராக இருந்து வருகிறார்.

சினிமா பயணம்

சைக்காலஜி டிகிரி படித்திருக்கும் அக்‌ஷரா ஹாசன், அடிப்படையில் சல்சா, ஹிப் ஹாப், பரதநாட்டியம் தெரிந்த நடன கலைஞர் ஆவார். 2010இல் பாலிவுட் இயக்குநர் ராகுல் தோலாகியா உதவியாளராக சோசைட்டி என்ற படத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்துக்கு பின்னர் ஏராளமான விளம்பர படங்களில் பணியாற்றிய இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தபோது அத்தனையும் நிராகரித்தார்.

பின்னர் 2015இல் அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தில் ஹீரோயினாக நடித்து நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. ஆர். பால்கி இயக்கியிருந்த இந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

தமிழில் அஜித்குமார் நடித்த விவேகம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து கடாரம் கொண்டான், அச்சம் மடம் நானம் பயிற்பு போன்ற படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படம் வெளியாகாமல் தாமதமாகியுள்ளது.

அதேபோல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ஃபிங்கர் டிப் என்ற வெப்சீரிஸிலும் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

அக்‌ஷரா ஹாசன் திறமைகள்

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் நடனத்தில் தேர்ந்தவராக இருந்து வரும் அக்‌ஷரா ஹாசன், பாடகியாகவும் இருக்கிறார். முறையாக இசை பயின்ற இவர் அக்காவுடன் பல இசை ஆல்பங்கள் உருவாக்கும் பணிகளில் இருந்துள்ளார். அத்துடன் தமிழ் தவிர இந்தி மொழியும் பேசும் இவர், மேடை நாடகங்களிலும், லைவ் பெர்பார்மென்ஸ்களிலும் கலக்கி வருகிறார்.

மனநல ஆரோக்கியம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்து தனது சமூக வலைத்தளங்ளில் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

முன்னாள் ஹீரோயின் மகனுடன் டேட்டிங்

கமல்ஹாசனுடன் உல்லாச பறவைகள், ரஜினியுடன் முரட்டு காளை போன்ற படங்களில் ஜோடியாக நடித்த ரதி அக்னிஹோத்ரி மகனும், நடிகருமான தனுஜ் விர்வானியுடன் நான்கு ஆண்டு காலம் வரை நடிகை அக்‌ஷரா ஹாசன் டேட்டிங்கில் இருந்துள்ளார்.

ஒரு அக்‌ஷரா ஹாசனின் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டபோது, தனுஜ் விர்வானியுடனான தனிப்பட்ட பெர்சனல் புகைப்படங்கள் லீக் ஆன நிலையில் அவருடனான உறவை முறித்துகொண்டார்.

அதேபோல் அக்‌ஷரா ஹாசன் பெளத்த மதத்துக்கு மாறியதாக தகவல்கள் உலா வந்த நிலையில், தந்தை கமல்ஹாசன் அதைப்பற்றி அக்‌ஷரா பெயரை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில்," அக்சு மதம் மாறி விட்டாயா? மதம் போல் அல்லாமல் அன்பு நிபந்தனையற்றது. லவ் யூ" என தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அக்‌ஷரா," இல்லை, நான் இன்னும் நாத்திகர். பௌத்தம் ஒரு வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறை என்பதால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ஸ்டார் கிட், முன்னணி ஹீரோயின் சகோதரி என அடையாளங்கள் இருந்தபோதிலும், ஏன் தானே ஒரு நடிகையாக இருந்தாபோதிலும் ஊடக ஒளி, வெளிச்சம் மற்றும் ரசிகர்கள் வட்டம் தன் மீது படாதவாறு வாழ்த்து வரும் பிரபலமாக திகழ்ந்து வரும் அக்‌ஷரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.