TAMIL MOVIES: அஜித்தின் தெறிக்கவிடும் அதிரடி காட்சியுடன் விவேகம்! ஆகஸ்ட் 24இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்-check out the list of important tamil movies released on this day aug 24 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies: அஜித்தின் தெறிக்கவிடும் அதிரடி காட்சியுடன் விவேகம்! ஆகஸ்ட் 24இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

TAMIL MOVIES: அஜித்தின் தெறிக்கவிடும் அதிரடி காட்சியுடன் விவேகம்! ஆகஸ்ட் 24இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 24, 2024 11:38 AM IST

Tamil Movies on this day Aug 24: அஜித்தின் தெறிக்கவிடும் அதிரடி காட்சிகளுடன் கூடிய விவேகம் படம் உள்பட சிவாஜி கணேசன், பிரபு உள்ளிட்டோரின் சூப்பர் ஹிட் படங்களும் ஆகஸ்ட் 24ஆம் தேதியான இதே நாளில் வெளியாகியுள்ளன

Tamil Movies on this day Aug 24: அஜித்தின் தெறிக்கவிடும் அதிரடி காட்சியுடன் விவேகம்! ஆகஸ்ட் 24இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
Tamil Movies on this day Aug 24: அஜித்தின் தெறிக்கவிடும் அதிரடி காட்சியுடன் விவேகம்! ஆகஸ்ட் 24இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

மருதநாட்டு வீரன்

சிவாஜி கணேசன் - ஜமுனா நடிப்பில் டி.ஆர். ரகுநாத் இயக்கியிருக்கும் சாகச திரைப்படம் மருதநாட்டு வீரன். 1961இல் வெளியான இந்த படத்தில் பி.எஸ். வீரப்பா, பி. கண்ணாம்பா, ஏ. கருணாநிதி உள்பட பலரும் நடித்திருப்பார்கள. படத்தில் சிவாஜியின் வாள் சண்டை காட்சிகள் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கும். எஸ்.வி. வெங்கடராமன் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றன. இந்த படம் வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகின்றன

மை டியர் மார்த்தாண்டன்

பிரபு , குஷ்பூ நடிக்க காமெடி படமாக வெளியாக ரசிகர்களை கவர்ந்த படம் மை டியர் மார்த்தாண்டன். 1990இல் வெளிவந்த இந்த படத்துக்கு ஜி.எம். குமார் கதை எழுதியுள்ளார். ஹாலிவுட் படமான கமிங் டூ அமெரிக்கா என்ற படத்தை தழுவி இதன் மை டியர் மார்த்தாண்டன் அமைந்திருக்கும். படத்தில் ஐடியா மணி என்ற வேடத்தில் தோன்றிய கவுண்டமணியின் காமெடி காட்சிகள் பேசப்பட்டன். இளையராஜா இசையில் இளவட்டம் கை தட்டும், கல்யாண மாப்பிள்ளைக்கு, சத்தம் வராமல் போன்ற பாடல்கள் ஹிட்டாக அமைந்தன. பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பை பெற்ற மை டியர் மார்த்தாண்டன் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகின்றன

சரிகமபதநி

பார்த்திபன் இயக்கி நடித்த ரொமாண்டிக் டிராமா பாணியலான படம் சரிகமபதநி. ரோஜா, சங்கீதா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருப்பார்கள். 1994இல் வெளியான இந்த படத்தில் விஜயகுமார், மனோரமா, வினுசக்கரவர்த்தி, சின்னி ஜெயந்த் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தேவா இசையில் ஹேய் கலா கலா என்ற பாடல் தாளம் போட வைத்தன. பக்கா கமர்ஷியல் கதையாக இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய இந்த படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன

பிரபு தேவா, ரோஜா, வடிவேலு, ராதிகா, விஜயகுமார் பிரதான கதாபாத்திரத்தில் ஆர். செல்வராஜ் இயக்கிய படம் ராசய்யா. 1995இல் வெளியான காதல் கலந்த பேமிலி சென்மெண்ட் படமான ராசய்யா பிரபுதேவா சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்தது. பிரபுதேவா - வடிவேலு காம்போவின் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இளையராஜா இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் மூலம் மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரணி பாடகியாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் ஆகிறது

விவேகம்

அஜித்குமார் - சிறுத்தை சிவா காம்போவின் மூன்றாவது படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் விவேகம். ஆக்சன் த்ரில்லர் சயின்ஸ் பிக்சன் படமாக இருந்த இதில் காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓப்ராய், கருணாகரன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். 2017இல் வெளியான இந்த படத்தின் அஜித்தின் தெறிக்கவிடும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அனிருத் இசையில் பாடல்கள், பின்னணி இசை பட்டைய கிளப்பின. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 150 கோடி வரை வசூலித்த விவேகம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகின்றன

மேற்கு தொடர்ச்சி மலை

விஜய் சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கத்தில் 2018இல் வெளியான படம் மேற்கு தொடர்ச்சி மலை. தேனி பகுதியை ஓட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து ஏலக்காய் மூட்டையை மலைப்பாதை வழியே கீழே இறக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் கவர்ந்த எதார்த்த படமாக இது அமைந்தது. புதுமுகங்கள் நடித்திருந்த இந்த படத்துக்கு இளையராஜாவின் இசை பலமாக இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.