இது நியாயமா? ’தீபக் பேசியதை எல்லாம் விட்டுவிட்டார்கள்' விஜய் சேதுபதியை தாக்கி நடிகை அர்ச்சனா வெளியிட்ட வீடியோ!
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், அருண் பிரசாத்தின் காதலியுமான நடிகை அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கோபமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. போதா குறைக்கு நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் தர்ஷிகாவும், சத்யாவும் வெளியேற்றப்பட்டனர். தற்போது வீட்டிற்குள் பவித்ரா ஜனனி, ராயன், ஜாக்குலின், ரானவ், ரஞ்சித், முத்துக்குமரன், , மஞ்சரி நாராயணன், , சௌந்தரியா நஞ்சுதன், ஜெஃப்ரி ஆகியோர் உள்ளனர்.
நடிகை அர்ச்சனா வெளியிட்ட வீடியோ
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், அருண் பிரசாத்தின் காதலியுமான நடிகை அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கோபமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய் சேதுபதியை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.