HBD Vignesh Shivan: இளம் இயக்குநர்..டிரெண்டிங் பாடலாசிரியர்! இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் விக்னேஷ் சிவன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vignesh Shivan: இளம் இயக்குநர்..டிரெண்டிங் பாடலாசிரியர்! இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் விக்னேஷ் சிவன்

HBD Vignesh Shivan: இளம் இயக்குநர்..டிரெண்டிங் பாடலாசிரியர்! இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் விக்னேஷ் சிவன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Sep 18, 2024 06:10 AM IST

HBD Vignesh Shivan: தமிழ் சினிமாவின் ளம் இயக்குநர், டிரெண்டிங் பாடலாசிரியர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கணவர் என பன்முகங்களை கொண்டிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாகவும் திகழ்ந்து வருகிறார்.

HBD Vignesh Shivan: இளம் இயக்குநர்..டிரெண்டிங் பாடலாசிரியர்! இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் விக்னேஷ் சிவன்
HBD Vignesh Shivan: இளம் இயக்குநர்..டிரெண்டிங் பாடலாசிரியர்! இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் விக்னேஷ் சிவன்

சினிமா பயணம்

சென்னையை சேர்ந்த விக்னேஷ் சிவன், சிறுவயதில் இருந்தே இயக்குநராக வேண்டும் என ஆசையை கொண்டவராக இருந்துள்ளாராம். பள்ளி காலத்தில் டிவி நிகழ்ச்சிகளை நண்பர்களிடம் இவர் விவரிக்கும் விதத்தை கேட்கே இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருந்துள்ளது.

கல்லூரி படிப்பை முடிந்த பின்னர் முதன் முதலில் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். 20 நாட் ஈக்வல் டூ 30 என்ற அந்த படத்தை யூடியூப்பில் கூட பதிவேற்றாமல் இன்று வரையிலும் இருந்துள்ளார். இதற்கு காரணமாக பல்வேறு படங்களுக்கு வேடிக்கையாக கமெண்ட் செய்யும் இவர் விக்னேஷ் சிவன், தனது படத்துக்கு வரும் கமெண்டுகளுக்கு பயந்து அதை பதிவேற்றவில்லை என பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

நண்பரும், இசையமைப்பாளருமான தரண் மூலம் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். சிம்பு - வரலட்சுமி நடிப்பில் ரெமாண்டிக் காமெடி படமாக உருவான போடா போடி தான் விக்னேஷ் சிவன் இயக்கிய முதல். ரசிகர்களை கவர்ந்த இந்த படம் ஓரளவு வசூலையும் ஈட்டியது.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல்

முதல் படத்துக்கு பின்னர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய விக்னேஷ் சிவன், அதன் பிறகு தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரெளடிதான் படத்தை இயக்கினார்.

இந்த படத்தின்போது தான் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நட்பாகி, காதலாகி ஒன்பது ஆண்டு உறவுக்கு பின்னர் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்.

இவர்கள் இருவரும் காதல் உறவில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும் பொது இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஜோடி வலம் வந்து கொண்டிருந்தனர்.

திருமணமான ஆறு மாதத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

விக்னேஷ் சிவன் படங்கள்

விக்னேஷ் சிவன் மூன்றாவதாக இயக்கிய படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட்டான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது. படமும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்க காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற ரொமாண்டிக் காமெடி படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாந ஆந்தாலஜி படமான பாவ கதைகள் படத்தில் லவ் பண்ணா உட்ரணும் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது கோமாளி பட இயக்குநர் பிரிதீப் ரங்கநாதன், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, கீரித்தி ஷெட்டி, யோகி பாபு நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பாடலாசிரியாக விக்னேஷ் சிவன்

இயக்குநராக மட்டுமல்லாமல் பாடலாசிரியாக பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். தான் இயக்கிய முதல் படமான போடா போடி படத்திலேயே நான்கு பாடல்களை எழுதிய இவர், தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.

அஜித்தின் சூப்பர் ஹிட் ஓபனிங் பாடல்களான அதாரு அதாரு, நாங்க வேற மாறி, தனுஷின் மாரி படத்தில் இடம்பெறும் தப்பாத்தான் தெரியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ரத்தமாறே போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

இதுதவிர சில மியூசிக் விடிக்களுக்கும் பாடல் எழுதியிருக்கும் விக்னேஷ் சிவன், ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் நெற்றிக்கன், கூழாங்கல், காத்தவாக்குல ரெண்டு காதல், ராக்கி, கனெக்ட் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக, தனது பாடல் வரிகளை ட்ரெண்டிங்காக மாற்றும் பாடலாசிரியராக சினிமாவை கனவாக வைத்து வரும் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.