தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Angadi Theru: "அஞ்சலி மார்பகத்த தப்பா பண்ணேன்னு; ரொம்ப மோசம்” - அங்காடி தெரு சீன் குறித்து இயக்குநர் வெங்கடேஷ்!

Angadi Theru: "அஞ்சலி மார்பகத்த தப்பா பண்ணேன்னு; ரொம்ப மோசம்” - அங்காடி தெரு சீன் குறித்து இயக்குநர் வெங்கடேஷ்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 03, 2024 05:35 AM IST

Angadi Theru: சீன் பேப்பரை பார்க்கும் பொழுது தான் அந்த இடத்தில், அவன் அவளின் மார்பகத்தை தவறான முறையில் அணுகினான் என்று இருந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது. - இயக்குநர் வெங்கடேஷ்

Angadi Theru: "அஞ்சலி மார்பகத்த தப்பா பண்ணேன்னு ரொம்ப மோசம்” - அங்காடி தெரு சீன் குறித்து இயக்குநர் வெங்கடேஷ்
Angadi Theru: "அஞ்சலி மார்பகத்த தப்பா பண்ணேன்னு ரொம்ப மோசம்” - அங்காடி தெரு சீன் குறித்து இயக்குநர் வெங்கடேஷ்

Angadi Theru: அங்காடி தெரு திரைப்படத்தில் அஞ்சலியை அத்துமீறி, ஆபாசமாக நடந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் இயக்குநர் வெங்கடேஷ். இந்த நிலையில், அவர் அந்த கதாபாத்திர அனுபவங்கள் குறித்து ரெட் நூல் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, "அங்காடி தெரு இயக்குநர் வசந்த பாலன் திடீரென்று ஒரு நாள், என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னார். இதையடுத்து நானும், அவரும் சந்தித்தோம். அப்போது அவர் அடுத்ததாக ஒரு படம் எடுக்க இருக்கிறேன். அந்தப்படத்தின் பெயர் அங்காடித்தெரு என்று சொன்னார்.

அங்காடி தெரு வாய்ப்பு

எனக்கு முதலில் அங்காடி என்றால் என்னவென்று புரியவில்லை. அதற்கு அவர் மார்க்கெட் என்பதைத்தான் அங்காடி என்று குறிப்பிட்டேன் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் தலைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். 

இதையடுத்து அவர், அந்தப் படத்தில் நான் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் அப்பொழுதே பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருந்தேன். என்னுடைய படங்களிலேயே பல வில்லன்கள் இருப்பார்கள். ஆனாலும், நான் எந்த படத்திலும் நடிப்பதற்கு முயற்சி செய்யவில்லை. இந்த நிலையில், இவர் இப்படி கேட்டவுடன், என்னால் முடியாது என்றும்  நான் ஏற்கனவே இரண்டு படங்களில் இயக்குனராக கமிட் ஆகி இருக்கிறேன் என்றும் கூறி, நிலைமையை எடுத்துச் சொன்னேன். ஆனால் அவரோ, சார் நான் இந்த கேரக்டருக்காக நிறைய பேரை ஆடிஷன் செய்து பார்த்து விட்டேன். யாரும் செட் ஆகவில்லை. நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பீர்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும் நான்  யோசித்தேன். 

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால், அவரோ உங்களால் இப்போது வர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களால் எப்போது வர முடியுமோ அப்போது வாருங்கள். அதுவரை நான் காத்திருக்கிறேன் என்று கூறினார் 

இவர் இப்படி சொன்னவுடன், எனக்கு ஒரு விதமாக ஆச்சரியம் ஏற்பட்டது. அப்படி என்ன கேரக்டர் என்று நான் அவரிடம் கேட்டேன். இதைடுத்து அவர், சார் நீங்கள் நடிக்க இருப்பது ஒரு நெகட்டிவ் கேரக்டர். இந்த கேரக்டரை பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும்  அனைவரும் உங்களை திட்டுவார்கள் என்றார்.

அனைவரும் திட்டுவார்கள் என்றால், நிச்சயமாக ஒரு பவர்ஃபுல்லான கேரக்டராக தான் இருக்கும் என்று  ஊர்ஜிதமாக நம்பி, அந்த கேரக்டருக்கு ஓகே சொன்னேன் கூடவே, இரவு மட்டும் தான் வர முடியும் என்று கண்டிஷன் போட்டேன்.  அவரும் இந்த படமும் இரவு தான் நடக்கிறது என்று கூறி என்னை படத்தில் கமிட் செய்தார்.

அவ்வளவு  மோசமான கேரக்டர்

அந்த கேரக்டரில் நடிக்கும் போது தான், அந்த கேரக்டர் மிகவும் மோசமான கேரக்டர் என்பது எனக்கு புலப்பட ஆரம்பித்தது. இதையடுத்து நான் தெரியாமல், அந்த கேரக்டரை ஒப்புக்கொண்டு விட்டோமோ என்று எண்ணினேன். இந்த சமயத்தில் தான் ஒரு நாள் அஞ்சலியை நான் அடித்து ரூமுக்குள் தள்ளி போர்வையை சாத்துவது போன்ற சீனை எடுத்தார்கள். சீனை எடுத்து முடித்தவுடன், முடிந்து விட்டது  கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டார்கள். 

ஆனால், உள்ளே என்ன நடந்தது என்பது குறித்தான கேள்வி எனக்கு எழுந்து கொண்டே இருந்தது. நான் இதை துணை இயக்குனரிடம் கேட்டபோது, அவர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே, எனக்கு அதில் சந்தேகம் வந்துவிட்டது. இதையடுத்து நான் வசந்த பாலனிடம் சீன் பேப்பரை கொடுங்கள் என்று கேட்டேன். அவர் கண்டிப்பாக சீன் பேப்பர் வேண்டுமா என்று கேட்டார். ஆமாம் என்றேன்.

சீன் பேப்பரை பார்க்கும் பொழுது தான் அந்த இடத்தில், அவன் அவளின் மார்பகத்தை தவறான முறையில் அணுகினான் என்று இருந்தது.  அதை பார்த்தவுடன் எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது. அன்று இரவு முழுக்க நான் மிகவும் டிஸ்டர்ப்கவே இருந்தேன். இறுதியில் நான் ஒரு டைரக்டராக இருந்து, அதனை யோசித்துப் பார்த்தேன். அப்போது நாம் ஒரு இயக்குநர், நாமே அப்படி யோசிக்க கூடாது. அது வெறும் கேரக்டர் என்பதை புரிந்துகொண்டு அதை கடந்து சென்றேன்" என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.