தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vishal: ‘முடிஞ்சா கோயிலைத் தொட்டு பாருங்கள்’.. நடிகர் விஷால் பரபரப்பு பேச்சு!

Actor Vishal: ‘முடிஞ்சா கோயிலைத் தொட்டு பாருங்கள்’.. நடிகர் விஷால் பரபரப்பு பேச்சு!

Karthikeyan S HT Tamil
Sep 11, 2023 12:05 PM IST

"முடிஞ்சா கோவிலை தொட்டு பாருங்க..நா அங்க வந்து நிப்பேன்" என்று நடிகர் விஷால் பரபரப்பாக பேசியுள்ளார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் (செப்.) 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் விஷால், அய்யனார் சிலை முன்பு இந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டது. இந்த முனீஸ்வரன் கோயில் கட்டிக் கிட்டத்தட்ட 63 வருஷம் ஆகி இருக்கு. PWD வந்து இன்னைக்கு இந்த இடத்தை ஆக்கிரமிப்பு பண்ணி இருக்காங்க சொல்லி இங்க போர்டு வச்சிருக்காங்க. இந்த இடத்தைக் காலி பண்ணனும்னு சொல்றாங்க. எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். ஆக்கிரமித்த நிலத்தை மீட்பது எனக்கு ஒன்னும் புதிய விஷயம் கிடையாது. நடிகர் சங்க நிலத்தையே மீட்டுட்டேன். வாழ்க்கையில் எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். இதுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உண்மையிலேயே கடவுள் நல்லது பண்ணுவார்.

நான் சும்மா சொல்லிட்டு போற மனுஷன் கிடையாது. காலி பண்ணச் சொல்லி இங்க போர்டு வைக்கட்டும், அந்தச் சிலையை உடைக்கிறதுக்கு முன்னாடி உங்கள் சார்பா நான் தான் முதலில் வந்து நிற்பேன். 63 வருடங்களாக இத்தனைக் குடும்பங்கள் இங்கு வாழ்ந்து, இந்த இடத்தை அழகுபடுத்தி இருக்காங்க. ஒரு கோயில அழகுபடுத்த வேண்டும் என அவங்க வந்து கேட்ட விண்ணப்பம் ஒரு அடிப்படை விண்ணப்பம் தான்.

இதைத் தாண்டி வந்து இந்த இடத்தை என்ன அழகுபடுத்த முடியும், இதை செஞ்சா என்ன புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். சும்மா ஒரு கிரீன் பேனால ஒரு ஐஏஸ் அதிகாரி கையெழுத்துப் போடுவாரு, உடனே இங்க வந்து காலி பண்ணச் சொல்லி ஒரு போர்டு போடுவாங்க. இங்க அதைத் தாண்டி ஒரு விஷயம் இருக்கு, நம்மளோட உணர்வுனு ஒன்னு இருக்கு. நமக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கையில்தானே ஓட்டு போட்டோம். கண்டிப்பா உங்களுக்கு நல்லது நடக்கும். நல்லது நடக்கிற வரைக்கும் நான் உங்களைக் கைவிட மாட்டேன்" என்று விஷால் உறுதியளித்துப் பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்