தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vijay: மாஸ்டரில் காட்சிகளை நீக்கிய லோகேஷ்; டின்னருக்கு வராத சாந்தனு; லியோ செட்டில் கலாய்த்த விஜய்!

Actor Vijay: மாஸ்டரில் காட்சிகளை நீக்கிய லோகேஷ்; டின்னருக்கு வராத சாந்தனு; லியோ செட்டில் கலாய்த்த விஜய்!

Kalyani Pandiyan S HT Tamil
May 15, 2023 01:17 PM IST

கொரோனா காலத்தில் வெளியான இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படம் பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை ஈட்டியது. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த நிலையில் விஜயின் தீவிர ரசிகரான சாந்தனு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

Actor vijay
Actor vijay

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே விஜயின் மாஸ்டர் படத்தில் கமிட் ஆனார் லோகேஷ். கொரோனா காலத்தில் வெளியான இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படம் பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை ஈட்டியது. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த நிலையில் விஜயின் தீவிர ரசிகரான சாந்தனு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். லோகேஷ் சாந்தனுவிடம் கதை சொல்லும் அதில் அதிக காட்சிகள் இருந்ததாக தெரிகிறது.

ஆனால் படத்தின் நீளம் கருதி திரையில் அவரது பெரும்பான்மையான காட்சிகள் படத்தில் கட் செய்யப்பட்டு இருந்தன. இதனால் நடிகர் சாந்தனு மீது பல்வேறு வகையான எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. இதனால் சாந்தனு அதிருப்தியும் அடைந்தார். 

இந்த அதிருப்தியை அண்மையில் நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியும் இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலும் ஆனது. இந்த நிலையில் அதனைத்தொடர்ந்து அவர் கொடுத்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் செய்த வேலைக்கு விஜய் சொன்ன கமெண்ட் குறித்து பகிர்ந்தார்.

அவர் பேசிய போது, “ என்னை ஒரு வாரம் முன்னர் லோகேஷ் கனகராஜ் இரவு டின்னருக்கு வா என்று கூப்பிட்டான். ஆனால் நான் இராவணக்கோட்டம் பட ரிலீஸில் மிகவும் பிஸியாக இருந்த காரணத்தால் என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் பின்னர் சில நாட்களுக்கு பிறகு லியோ படப்பிடிப்பில் விஜயை அண்ணாவை சந்திக்கச் சென்றிருந்தேன். 

நான் அங்கு சென்ற உடனேயே விஜயிடம் லோகேஷ், அண்ணா ஓவரா பண்றான் இவன்.. டின்னருக்கு வீட்டுக்கு கூப்பிட்டா வரமாட்றான்.. என்று புகார் சொன்னார். அதற்கு விஜய்,  ‘ஆமா நீ கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு வீட்டுக்கு வேர வரணுமா’ என கலாய்த்தார்” என்று பேசினார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்