தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijaysethupathi Ace Title Teaser: கிராபிக்ஸ், துப்பாக்கி, பைக் சேஸ்..! கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’

VijaySethupathi ACE Title Teaser: கிராபிக்ஸ், துப்பாக்கி, பைக் சேஸ்..! கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 17, 2024 08:57 PM IST

VijaySethupathi ACE Title Teaser: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட நடிகை ருக்மிணி வசந்த், மலையாள நடிகை திவ்யா பிள்ளை, யோகி பாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ டைட்டில் டீசர்
கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ டைட்டில் டீசர்

ட்ரெண்டிங் செய்திகள்

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார்.

கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருள்செலவில் தயாரித்திருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்தப் படத்தின். ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதியின் இளமையானத் தோற்றம் + புகை பிடிக்கும் குழாய் + தாயக்கட்டை என பல சுவாரஸ்யமான விசயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

டைட்டிலுக்கான டீசரில் படத்தில் தோன்றும் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் அறிமுகமும், பின்னணி இசையும், விஜய் சேதுபதியின் திரை தோன்றலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

டீசரில் சூதாட்டம், துப்பாக்கி, குண்டு வெடிப்பு, கொள்ளை, பைக் சேசிங் போன்றவை இருந்தாலும், யோகி பாபுவின் ரியாக்‌ஷன் சிறப்பாக இருப்பதாலும், இந்த திரைப்படம் கிரைம் வித் காமெடி திரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டீசரில் அனிமேஷன் பாணியில் கதாபாத்திரங்கள் அறிமுகமாவதும், அதற்கு ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் பொருத்தமாக அமைந்துள்ளது. விரைவில் 'ஏஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் இரண்டாவது படம்

கடந்த ஜனவரி பொங்கல் ரிலீஸாக விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ் வெளியானது. இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி இருந்த இந்த படம் அவரது முதல் இந்தி படமாக அமைந்தது. டார்க் ஹுயூமர் பாணியில் இருந்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டாவது படமாக ஏஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி - ஆறுமுக குமார் கூட்டணி

விஜய் சேதுபதியின் நண்பரான இயக்குநர் ஆறுமுக குமார், அவரை வைத்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற பிளாக் காமெடி படத்தை இயக்கினார். 2018இல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத்தொடார்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்து ஏஸ் படத்தை உருவாக்கியுள்ளனர். ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் போல் இந்த படமும் வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்