தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maharaja Trailer: 'வீட்ல இருந்த லட்சுமி திருடுபோச்சு'-விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா டிரைலர் இதோ

Maharaja Trailer: 'வீட்ல இருந்த லட்சுமி திருடுபோச்சு'-விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா டிரைலர் இதோ

Manigandan K T HT Tamil
May 30, 2024 06:38 PM IST

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் டிரைலரின் 'என் லட்சுமியைக் காணோம். அத எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க' என காவல் நிலையத்தில் விஜய் சேதுபதி பேசுவது போன்று காட்சிகள் வருகின்றன.

Maharaja Trailer: 'வீட்ல இருந்த லட்சுமி திருடுபோச்சு'-விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா டிரைலர் வெளியானது
Maharaja Trailer: 'வீட்ல இருந்த லட்சுமி திருடுபோச்சு'-விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா டிரைலர் வெளியானது

ட்ரெண்டிங் செய்திகள்

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் டிரைலரின் 'என் லட்சுமியைக் காணோம். அத எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க' என காவல் நிலையத்தில் விஜய் சேதுபதி பேசுவது போன்று காட்சிகள் வருகின்றன.

லட்சுமி என்பது குறித்த தகவல் டிரைலரின் இல்லை. டிரைலர் முடியும் தருவாயில் அனுராக் காஷ்யப் முகம் காட்டப்படுகிறது.

மகாராஜா என்ற டைட்டிலும் சிவப்பு நிறத்தில் ரத்தம் சிந்துவது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி.

ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் புருஷோத்தமன் பணிபுரிந்துள்ளார். பி அஜனீஷ் லோக்நாத் இசையை கவனித்துள்ளார். டிரைலரிலேயே இசை மிரட்டுகிறது.

பாடல் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, எடிட்டராக பிலோமின் ராஜ் பணிபுரிந்துள்ளார். இந்த ஆக்ஷன் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பணிபுரிந்துள்ளார். வசனத்தை நித்திலன் சாமிநாதன், ராம் முரளி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். படத்தின் டிரைலர் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது.

மகாராஜா படத்தில்…

மகாராஜா படத்தில் மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது, இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

துபாயில் என்ஆர்ஐ கணக்காளராக இருந்ததைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி தனது திரைப்பட வாழ்க்கையை பின்னணி நடிகராகத் தொடங்கினார். தென்மேற்கு பருவக்காற்று (2010) திரைப்படத்தில் தனது முதல் முக்கிய கதாபாத்திரத்திற்கு முன்பு சிறிய துணை வேடங்களில் நடித்தார். 2012 இல், சுந்தரபாண்டியன், பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

இதுவரை விஜய் சேதுபதியின் குறிப்பிடத்தக்க படங்கள்

சூது கவ்வும் (2013), இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013), பண்ணையாரும் பத்மினியும் (2014), காதலும் கடந்து போகும் (2016), இறைவி (2016), விக்ரம் வேதா (2017) ஆகிய படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சேதுபதி. செக்கச் சிவந்த வானம் (2018), பேட்ட (2019), மாஸ்டர் (2021) மற்றும் விக்ரம் (2022). சூப்பர் டீலக்ஸ் (2019) படத்தில் டிரான்ஸ் பெண்ணாக நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். அவர் இந்தி தொடர் ஃபார்ஸி மற்றும் ஜவான் (இரண்டும் 2023) திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் தயக்கமின்றி நடிக்கும் ஆற்றல் கொண்டவர். விக்ரம் படத்திலும் நடிப்பில் மிரட்டியிருந்தார். மெரி கிறிஸ்துமஸ் படத்தில் பாலிவுட்டில் ஹீரோவாக கலக்கினார். அந்தப் படத்தை புகழ்பெற்ற இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்