ஓடிடியில் தஞ்சம் அடைந்த கங்குவா! என்ன செய்ய காத்திருக்கிறார்கள் ஓடிடி ரசிகர்கள்?
தியேட்டர்களில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வந்த கங்குவா திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்போது ரசிகர்கள் எந்த மாதிரியான விமர்சனங்களை வெளிப்படுத்த உள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான்பார்க்க வேண்டும்.
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மோசமான விமர்சனம்
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளிவந்த கங்குவா, மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அத்துடன் அந்தப் படத்தில் நடித்தவர்களையும் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக பேசி, மிரட்டல் விடுத்தனர். இதனால், படம் 2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்த படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஓடிடியில் வெளியிட முடிவு
தியேட்டரில் சுமார் 110 கோடி வசூலை மட்டுமே பெற்ற கங்குவா திரைப்படத்தை ஓடிடியில் விரைவாக வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்தது. இதன் காரணமாக டிசம்பர் 12ம் தேதிக்கு மேல் ஓடிடியில் வெளியாகும் என நினைத்த கங்குவா திரைப்படம் 4 நாட்களுக்கு முன்னரே அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது.
பொதுவாகவே, ஒரு படம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள் கழித்து ஓடிடியில் அப்படம் வெளியாகும். அந்த வகையில் கங்குவா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் 80 கோடி ரூபாய் கொடுத்து, வாங்கியதாகக் கூறப்படுகிறது
பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கங்குவா திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
கங்குவா கதை
கங்குவா படத்தின் மூலம் இயக்குனர் சிவா ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளார். இன்றைய காலத்தை 1070 களின் காட்டுமிராண்டி பழங்குடியினருடன் தொடர்புபடுத்தி கங்குவாவின் கதையை எழுதினார். இனங்களுக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலான மேலாதிக்கப் போராட்டம் அக்காலகட்டத்தில் எவ்வாறு இருந்தது? இந்த வர்க்கப் போராட்டத்தை மேலாதிக்கத்துக்காக நடத்த அந்நியர்கள் என்ன சதித்திட்டம் தீட்டினார்கள்?
நம் நாட்டை அபகரிக்க இந்த வர்க்கத்தின் போராட்டத்தை எடுக்க அந்நியர்கள் என்ன சதித்திட்டம் தீட்டினார்கள்? வெளிநாட்டினரின் சதிகளை ஒரு போராளி எவ்வாறு எதிர்கொண்டார்? கங்குவா அறிவியல் புனைகதை கூறுகளுடன் ஒரு காட்சி அதிசயமாக உருவாக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் இமேஜ், ஹீரோயிசம் பற்றிய கதையை தாண்டி இந்த படம் திரையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. கங்குவாவின் பின்னணியில் ஆக்ஷன் எபிசோடுகளும், காட்சிகளும் எழுதப்பட்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் இரண்டு காலகட்டங்களுக்கும் உள்ள தொடர்பை அர்த்தமுள்ளதாக சொல்வதில் இயக்குனர் குழப்பமடைகிறார்.
இத்தனை கிராபிக்ஸ் மற்றும் சண்டைகள் மூலம் கதையை நகர்த்தும் வலுவான உணர்ச்சி இல்லையென்றால், அனைத்தும் வீணாகிவிடும் என்று தோன்றுகிறது. கங்குவைப் பார்க்கும் போதும் இதே உணர்வுதான் ஏற்படுகிறது.
கனெக்ட் ஆகாத கங்குவா
இப்படம் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி பிறமாநில மக்களுக்கும் சரியாக கனெக்ட் ஆகவில்லை. நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்ததால், இரண்டாவது நாளே கங்குவா திரைப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது.
ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகியுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர்.
கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு வெளிநாடு பகுதிகளில் நடைபெற்றது.
சொதப்பியது எது?
கங்குவா படத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதையை நிகழ்காலத்துடன் இணைக்க முயன்றார், இயக்குநர் சிவா. கங்குவா திரைப்படத்தில் முக்கியமில்லாத கதாபாத்திரங்களின் அறிமுகமும், படத்தின் முதல் 20 நிமிடக் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் மோசமாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. கதை தேவை இல்லை என்றாலும்; ஐந்து வம்சங்களைப் பற்றி சொல்ல வந்த இயக்குநர் சிவாவின் முயற்சி பார்வையாளர்களைக் குழப்பியது. அதனால் பார்வையாளர்களை இந்தக் கதையில் முழுமையாக ஒன்றவில்லை.
பட்ஜெட்டில் பாதி கூட வசூலிக்காத கங்குவா
350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம் வெளியான 19 நாட்கலில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 38.72 கோடி ரூபாயும் உலகளவில் ரூ.105.2 கோடி ரூபாயும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது கங்குவா படத்தின் பட்ஜெட்டில் பாதியைக் கூட வசூலிக்க முடியவில்லை.
படத்தின் தாக்கம் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் எழுந்தது என்றால், தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் திரையரங்குகளில் பப்ளிக் ரிவியூ எடுக்க வருபவர்களைத் தடை விதிக்கும் அளவுக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.