அசால்டான ஹீரோ.. அறிவில்லாத ஹீரோயின்.. 3 ஆண்டுகளை நிறைவு செய்த 'கடத்தல் மன்னன்' நெல்சனின் டாக்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அசால்டான ஹீரோ.. அறிவில்லாத ஹீரோயின்.. 3 ஆண்டுகளை நிறைவு செய்த 'கடத்தல் மன்னன்' நெல்சனின் டாக்டர்

அசால்டான ஹீரோ.. அறிவில்லாத ஹீரோயின்.. 3 ஆண்டுகளை நிறைவு செய்த 'கடத்தல் மன்னன்' நெல்சனின் டாக்டர்

Malavica Natarajan HT Tamil
Oct 09, 2024 06:21 AM IST

கடத்தல் கதையை மையப்படுத்தி, அசாத்திய காமெடி வசனங்களால் மக்களை ஈர்த்த நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சனின் டாக்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

அசால்டான ஹீரோ.. அறிவில்லாத ஹீரோயின்.. 3 ஆண்டுகளை நிறைவு செய்த 'கடத்தல் மன்னன்' நெல்சனின் டாக்டர்
அசால்டான ஹீரோ.. அறிவில்லாத ஹீரோயின்.. 3 ஆண்டுகளை நிறைவு செய்த 'கடத்தல் மன்னன்' நெல்சனின் டாக்டர்

கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நெல்சன் இப்படத்தை இயக்கி இருந்தார். இவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் கூட. இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான இந்தப் படம் குடும்ப ஆடியன்ஸை வெகுவாகவே கவர்ந்த்து. தியேட்டர் முழுவதும் ஆரம்பம் தொடங்கி முடியும் வரை சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் படம் சென்றது.

ஆனால், இந்தப் படம் இரண்டு விதமான விமர்சனங்களையும் பெற்று, மக்களுக்கு பிடித்ததா இல்லையா என்ற குழப்பை ஏற்படுத்தியது. கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரை போதைப் பொருள் கடத்த வைத்த இயக்குநர் நெல்சன், இந்த முறை சிவகார்த்திகேயனை பெண் குழந்தைகளை கடத்தும் நபராக சித்தரித்துள்ளார்.

கணக்கச்சித நாயகனும், அறிவில்லாத நாயகியும்

இராணுவத்தில் மருத்துவராக இருப்பவர் வருண் (சிவகார்த்திகேயன்), கணக்கச்சிதமாக அனைத்து வேலைகளையும் செய்ய நினைக்கும் நபராக உள்ளார். இவருக்கு பத்மினி (பிரியங்கா மோகன்) என்ற பெண்ணை குடும்பத்தினர் பெண் பார்க்க வருகின்றனர். அப்போது, வருணை பத்மினி சந்திக்கிறார். காலர் உட்பட அனைத்து பட்டன்களையும் போட்டுக் கொண்டு, காலை 4 மணிக்கே எழுந்து படிக்கும் நபராக உள்ள வருணை பத்மினிக்கு பிடிக்கவில்லை.

இங்கு ஆரம்பிக்கிறது, நெல்சனின் வசனங்கள், தன் மகனை நிராகரித்த பெண்ணை அழகா இருந்தா அறிவு சுத்தமா இருக்காது அவர் முன்னாலே திட்டுகிறார் வருணின் தாய். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காது என மக்கள் வைக்கும் குற்றச்சாட்டை வசனமாகவே, படத்தில் வைத்ததன் மூலம் ஆடியன்ஸை தன் பக்கம் இழுக்கத் தொடங்கி இருப்பார் நெல்சன்.

வழக்கமான கடத்தல் கதை

பத்மினிக்கு வருணை பிடிக்கவில்லை என்றாலும், பத்மினியின் அண்ணன் மகளாக நடித்திருந்தா சாராவிற்கு வருணை மிகவும் பிடித்திருந்தது. இதனால், பள்ளியிலிருந்து எப்படியாவது சீக்கிரம் வீட்டிற்கு வந்து, வருணை பத்மினிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனத் துடிக்கிறார். இதுவே, வினையாகிப் போக, சாராவை சிலர் கடத்தி விடுகின்றனர். இதை அறிந்த வருண் சாராவைக் காப்பாற்ற பத்மினி குடும்பத்திற்கு உதவுவார். இவர் அந்தப் பெண்ணை கண்டுபிடித்தாரா? இல்லையா? இதற்காக அவர் செய்யும் வேலைகள் என்ன? என்பதே மீதிக் கதை.

பலமான வசனங்கள்சொல்லப்போனால், காதலியில் குடும்பத்திலிருந்து கடத்தப்பட்ட பெண்ணை மீட்கத் துடிக்கும் இளைஞரின் கதை என்பது தான் டாக்டர் படத்தின் சாராம்சம். ஆனால், இந்தப் படத்தை வழக்கமான தமிழ் சினிமா என சொல்லாமல் இருக்க வைக்க உதவி இருக்கிறது படத்தின் வசனங்கள். படம் முழுக்கவே பிளாக் காமெடிகள் சுற்றி வருகிறது. ஆனாலும் இது மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, நடிகை தீபாவின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகிறது.

சாவறதுன்னு முடிவாகிடுச்சி என தீபா பேசும் வசனம், 10thல எத்தன மார்க்கு என ஹீரே ஹீரோயினை பார்த்து கேட்கும் காட்சி, ரவுடிகளிடம் பேரம் பேசும் காட்சி, ரெடின் கிங்ஸ்லியின் வசனங்கள் என பலவற்றை மக்கள் திரும்ப திரும்ப பயன்படுத்தும்படி எழுதியுள்ளார்.

நம்பமுடியாத லாஜிக்

இந்தப் படத்தின் பல காட்சிகள் மக்களால் நம்ப முடியாத பல அம்சங்களைக் கொண்டிருக்கும். இருந்தாலும், லாஜிக் எனும் ஒன்றை மட்டும் படத்திலிருந்து விடுவித்து விட்டால், மொத்த படமும் ஹிட் தான். பெண் குழந்தையை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரை போலீசார் அணுகும் விதமும், அதற்காக அவர்கள் ஒருவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அனுப்பவது வரை ஓகே தான்.

ஆனால், அவர் என்ன ஆனார், தினமும் அங்கு நடக்கும் விஷயங்களை அப்டேட் செய்கிறாரா என்பதில் லாஜிக் இடிக்கிறது. போலீஸ் அனுப்பிய நபரை வைத்தே போலீசின் செயல்களை தீவிரமாக கண்காணித்து அதேபோல செயல்பட்டு, தங்கள் வீட்டு பெண்ணை கடத்தியது யார் என்பதை கண்டறிகின்றனர்.ஆனால், இவை எதுவும் போலீசிற்கு தெரியாமலே நடக்கும்.

நெட்வொர்க்கை கண்டறியும் ஹீரோ

தங்கள் வீட்டு பெண்ணை கடத்திய செயின் நெட்வொர்க்கை கண்டுபிடித்து, ஓடும் மெட்ரோ ரயிலில் ஒரு நீண்ட சண்டைக் காட்சியை வைத்துள்ளார் இயக்குநர். என்னதான், கதாநாயகன் ஒரு ராணுவத்தில் இருந்தாலும் உண்மையில் அவர் ஒரு டாக்டர், அப்படி இருக்கையில் எப்படி அனைத்து இடங்களிலும் இவருக்கு உதவி கிடைக்கிறது என்ற கேள்வி மக்கள் மனதில் எழாமல் இல்லை.

ஏதும் தெரியாத வில்லன்

இந்த சண்டையில், தமிழ்நாட்டில் பெண்களை கடத்திவரும் முக்கிய நபர் ஒருவரை கொலை செய்வார். ஆனால், இந்த தகவல் கூட தெரியாமல் எப்படி ஒரு கேங் லீடாரால் இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. அடுத்ததாக, காதலியின் குடும்பத்துடன் கோவா செல்லும் ஹீரோ, அவ்வளவு கடத்தல் வேலை செய்யும் வில்லனை தன் வார்த்தை ஜாலத்தால் நம்ப வைப்பது, ரசிகர்களால் நம்ப முடியவில்லை.

பின், உண்மையை அறிந்த பின் ஹீரோ, ஹீரோயின் அவர்களது குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டு, முன்னாள் ராணுவ அதிகாரியின் உதவியால் இறந்து போவது என எந்த காட்சியிலும் லாஜிக் இல்லை.

காப்பாற்றும் வசனம், இசை

ஆனால், படத்தில் எங்கெல்லாம் லாஜிக் இடிக்கிறதோ அங்கெல்லாம் கைகொடுத்துள்ளது நெல்சனின் வசனங்கள், அத்துடன் வழக்கமான கடத்தல் கதையை ஒரு மாஸ் ஹீரோவின் கதையாக மாற்றியுள்ளது அனிருத்தின் இசை. படத்தின் இசையும், வசனமும் இல்லை என்றால் இந்தப் படம் எப்படி இருக்கும் என யோசித்தே பார்க்க முடியாது.

ஆனால், படத்தில் உள்ள அத்தனை கேரக்கடர்களும் தங்களின் நடிப்பை அசுரத் தனமாக அளித்தள்ளனர். அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அப்படி ஒரு முன்னேற்றம். வழக்கமாக பேசிக்கொண்டே இருக்கும் சிவகார்த்திகேயனை பார்த்தவர்களுக்கு இந்த சிவகார்த்திகேயன் முற்றிலும் வித்யாசமானவர். தீபா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி போன்றோர் படத்தை தங்கள் கைகளில் தாங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக யோகிபாபுவை பற்றி வில்லன் டீமில் இருக்கும் நபர் ஐயம் பிரேக் ஹிஸ் மண்ட டியூட் எனப் பேசுவது, வலிச்சா சொல்லப் போகுது கோமதி போன்ற வசனங்களும், கிளைமேகஸ் காட்சியில் காதலனாக மாறிய வருணிடம் பேச ஹீரோயின் ஏங்கும் காட்சிகளும் பயங்கர ஹிட் ஆனது. அதே சமயத்தில், கோமதி காட்சிகள் பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என பலரும் விமர்சித்து வந்தனர்.

ஹிட்டடித்த பாடல்கள்

அனிருத் இசையில் வெளிவந்த ஹோ பேபி பாடல், செல்லம்மா பாடல், டாக்டர் படத்தின் தீம் மியூசிக் என அனைத்தும் ஹிட் அடித்ததனாலே இந்தப் படம் மக்களிடம் இவ்வளவு ஹைப்பை பெற்றது.

என்ன இருந்தாலும், இறுக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்களை இன்றும் இப்படம் சிரிக்க வைக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Whats_app_banner