Actor Seshu: லொள்ளு சபா புகழ் நடிகர் சேஷூவுக்கு மாரடைப்பு - தற்போதைய நிலை என்ன தெரியுமா?
Actor Seshu: நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Seshu: விஜய் டிவியில் லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் ஆனவர், நடிகர் சேஷூ. அதிலும் குறிப்பாக பாரதி ராஜாவின் மண்வாசனை என்னும் திரைப்படத்தை காமெடியாக மாற்றி கலாய்த்து தள்ளியிருப்பார்கள். அதில், காந்திமதி நடித்த ஒச்சாயி கிழவி வேடத்தில் நடித்து, அவரைப்போல கலாய்த்து பழமொழி சொல்லி பிரபலம் ஆனவர், நடிகர் சேஷூ.
அதிலும் மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன?, குடிச்சு போட்ட பாட்டிலை தூக்கி எடைக்கிப் போட்டானாம் எடைக்கி போட்ட பாட்டிலை தூக்கி குடிச்சி போட்டானாம் அந்த மாதிரியில இருக்கு என்று இவர் செய்த அலப்பறைகள் பலரையும் பல ஆண்டுகளாக நினைவுகூர வைத்து சிரிக்க வைத்தன.
அதன்பின்,சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக,2002ஆம் ஆண்டு தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி, வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், குலு குலு, பெஸ்ட்டி, கடமையைச் செய், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சரக்கு, வடக்குபட்டி ராமசாமி ஆகியப் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் நடித்திருந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
