தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Seshu Of Lollu Sabha Fame Dies Of Heart Attack

Actor Seshu: 'லொள்ளு சபா' புகழ் நடிகர் சேஷூ மாரடைப்பால் மரணம்

Marimuthu M HT Tamil
Mar 26, 2024 04:39 PM IST

Actor Seshu: நடிகர் சேஷூ காலமானார்.

Actor Seshu: லொள்ளு சபா புகழ் நடிகர் சேஷூ மாரடைப்பால் மரணம்
Actor Seshu: லொள்ளு சபா புகழ் நடிகர் சேஷூ மாரடைப்பால் மரணம்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்டப் படங்களில் நடித்து இருந்தநிலையில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் சற்றுமுன், மாரடைப்புக் காரணமாக நடிகர் சேஷூ காலமனார்.

மாரடைப்புக் காரணமாக, கடந்த 15ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சேஷூ, இன்று இல்லத்திற்குச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரை நீக்கியதும் அவரது உயிர் பிரிந்துள்ளது.

விஜய் டிவியில் லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் ஆனவர், நடிகர் சேஷூ. அதிலும் குறிப்பாக பாரதி ராஜாவின் மண்வாசனை என்னும் திரைப்படத்தை காமெடியாக மாற்றி கலாய்த்து தள்ளியிருப்பார்கள். அதில், காந்திமதி நடித்த ஒச்சாயி கிழவி வேடத்தில் நடித்து, அவரைப்போல கலாய்த்து பழமொழி சொல்லி பிரபலம் ஆனவர், நடிகர் சேஷூ.

அதிலும் மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன?, குடிச்சு போட்ட பாட்டிலை தூக்கி எடைக்கிப் போட்டானாம் எடைக்கி போட்ட பாட்டிலை தூக்கி குடிச்சி போட்டானாம் அந்த மாதிரியில இருக்கு என்று இவர் செய்த அலப்பறைகள் பலரையும் பல ஆண்டுகளாக நினைவுகூர வைத்து சிரிக்க வைத்தன.

அதன்பின்,சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக,2002ஆம் ஆண்டு தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி, வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், குலு குலு, பெஸ்ட்டி, கடமையைச் செய், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சரக்கு, வடக்குபட்டி ராமசாமி ஆகியப் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் நடித்திருந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

இந்நிலையில் தான், மாரடைப்புக் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் நடிகர் சேஷூ சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் சற்றுமுன் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, அவரது உயிர்பிரிந்தது.கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்துவருகின்றனர். 

அதில், கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் சரத் பாபு, மனோ பாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, ஜூனியர் பாலையா, டி.பி.கஜேந்திரன், போண்டாமணி, விஜயகாந்த் ஆகியோரின் இறப்பு, ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாதவை. அதில் பலர் மாரடைப்புக் காரணமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்புக்கான காரணங்கள்:

குறைவான உடல்ரீதியிலான பணிகளை செய்பவர்களாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரலாம். உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொழுப்பு, நீரிழிவு, மன அழுத்தம், புகையிலை பயன்படுத்தினால் உங்களுக்கு மாரடைப்பு வரலாம். 

வயது மற்றும் குடும்பப் பாரம்பரியம் ஆகியவையும் மாரடைப்புக்கான முக்கிய காரணமாகும். 

அறிகுறிகள்:

உங்களுக்கு மார்பில் தசை புண், தாடை வலி, சோர்வு, அஜீரணம், மார்பு வலி, மூச்சுத் திணறல், குளிர் வியர்வை, லேசான தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை அறிகுறிகளை உணர்ந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிடுங்கள்.

நோய் கண்டறிதல்:

எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி அல்லது ஈ.கே.ஜி). சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவை மூலம் மாரடைப்பினை துல்லியமாக அறியலாம்.

சிகிச்சை:

மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை மட்டுமே நீங்கள் எடுக்க வேண்டும். கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் மற்றும் ஒரு ஸ்டென்ட் வைத்து, இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யலாம். 

தடுப்பு உதவிக்குறிப்புகள்:

நன்கு சீரான உணவை உட்கொள்வது, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் தவிர்ப்பது, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுடன் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, உகந்த எடையைப் பராமரிப்பது மற்றும் வழக்கமான இதய பரிசோதனைக்குச் செல்வதன் மூலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்